ஐரோப்பா

பெரும் படை சூழ சீனா செல்லும் பிரித்தானிய பிரதமர்!! உறவை வளர்க்க புதிய முயற்சி!

  • January 28, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தலைமையிலான குழு, இன்று சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. சீனாவுடனான இங்கிலாந்தின் உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே மேற்படி விஜயம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது “பொற்காலத்திலிருந்து பனி யுகத்திற்கு திரும்புவதற்கு ஒப்பானது என விமர்சிக்கப்பட்டுள்ளது. குறித்த விஜயத்தின்போது பாதுகாப்பு, சைபர் ஊடுறுவல் குற்றங்கள், கலாச்சாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு பிரித்தானிய பிரதமர் […]

உலகம்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் ஆசிய விஜயம் : பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்த வடகொரியா!

  • January 28, 2026
  • 0 Comments

வடகொரியா நேற்று இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென் கொரிய மற்றும் ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு ஏவுகணைகளும் கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர்கள் அல்லது சுமார் 217 மைல்கள் பயணித்து ஜப்பான் கடலில் விழுந்ததாக ஜப்பானிய மற்றும் கொரிய அதிகாரிகள்  சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்காவின் கொள்கைக்கான பாதுகாப்பு செயலாளர் எல்பிரிட்ஜ் கோல்பி (Elbridge Colby) ஜப்பானுக்கு பயணித்த சில மணிநேரங்களில் குறித்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி மற்றும் கடந்த செப்டம்பரில் […]

இலங்கை செய்தி

25 நாட்களுக்குள் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

  • January 28, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 25  நாட்களுள் மாத்திரம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 645 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஜனவரி 1 முதல் 25 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15 ஆம் திகதி மாத்திரம் 10 ஆயிரத்து 483 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஜனவரி 1 முதல் 25 வரை இந்தியாவில் இருந்து 41 ஆயிரத்து 603 […]

இலங்கை

மீண்டும் அதிகரித்த தங்கம் : பவுண் ஒன்றின் விலை 4 இலட்சத்தை கடந்தது!

  • January 28, 2026
  • 0 Comments

உலகளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கமைய இன்றைய தினம் சர்வதேச சந்தையில் அவுன்ஸ் ஒன்று 5,250 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. அதேபோல் வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவையும் உச்சத்தை தொட்டன. சர்வதேச சந்தையின் விலை உயர்விற்கு அமைய, புறக்கோட்டை தங்கச் சந்தையில் பவுண் ஒன்றின் விலை 10000 ரூபாயால் அதிகரித்துள்ளது. இதன்படி 22 காரட் தங்கத்தின் விலை 379,600 ஆக பதிவாகியுள்ளது.  24 காரட் தங்கத்தின் விலை 405,000 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோருக்கு விசேட சலுகை வழங்கும் ஐரோப்பிய நாடு : 05 மாதங்கள் வாழ்ந்தால் சட்டப்பூர்வ அந்தஸ்த்து!

  • January 28, 2026
  • 0 Comments

சட்டப்பூர்வ அங்கீகாரம் இன்றி நாட்டில் வசித்து வேலை செய்து வந்த புலம்பெயர்ந்தோருக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்குவதாக ஸ்பெயின் அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஸ்பெயினின் இடம்பெயர்வு அமைச்சர் எல்மா சாய்ஸ் (Elma Saiz) இந்த விடயத்தை அறிவித்துள்ளார். ஸ்பெயினில் வசிக்கும் குடியேறிகளுக்கு ஒரு வருடம் வரை அங்கீகாரம் இல்லாமல் சட்டப்பூர்வ வதிவிட உரிமை மற்றும் வேலை செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கான விரைவான ஆணையின் மூலம் தனது அரசாங்கம் தற்போதுள்ள குடியேற்றச் சட்டங்களைத் திருத்தும் […]

இந்தியா

விமான விபத்தில் துணை முதல்வர் பலி: விசாரணை ஆரம்பம்!

  • January 28, 2026
  • 0 Comments

விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் Deputy CM Ajit Pawar உயிரிழந்துவிட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிர Maharashtra மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற தனி விமானம் புனே மாவட்டம், பாராமதி விமான நிலையத்தில் இன்று தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானது. விமானம் கீழே விழுந்து நொறுங்கி, தீப்பிடித்தெறிந்து. விபத்தில் அஜித் பவார் மற்றும் அவரது மெய் பாதுகாவர்கள் , விமானிகளும் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

இந்தியா செய்தி

மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் பயணித்த விமானம் விபத்து!

  • January 28, 2026
  • 0 Comments

இந்தியாவின்  மகாராஷ்டிரா மாநிலத்தின்  துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை நேரில் பார்த்த உள்ளூர் பொலிஸ் அதிகாரியொருவர், 66 வயதான அஜித் பவார்  உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனக் கூறியுள்ளார். விமானத்தில் இருந்த சிலர் காயமடைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. https://twitter.com/i/status/2016360094838190589

ஐரோப்பா

உக்ரைன் – ரஷ்யா போரில் 02 மில்லியன் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

  • January 28, 2026
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யா போரில் ஏறக்குறைய 02 மில்லியன் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சிந்தனைக் குழுவால் நேற்று வெளியிடப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதில் ரஷ்யா சார்பில் போரிட்ட 325,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம் (CSIS) கண்டறிந்துள்ளது. “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எந்தவொரு போரிலும் இந்த எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை “ரஷ்யப் படைகள் போர்க்களத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மெதுவாக […]

இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்ட திகதியில் மாற்றம்!

  • January 28, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரி வவுனியா வடக்கின் நெடுங்கேணி பகுதியில் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்தின் திகதி மாற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் முன்னெடுக்கப்படவிருந்த கவனவீர்ப்புப் போராட்டம், பெப்ரவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கின் பொது அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கமையவே திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

பழி தீர்க்குமா இலங்கை? 30 ஆம் திகதி பலப்பரீட்சை!

  • January 28, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி நாளை மறுதினம் (30) நடைபெறவுள்ளது. கண்டி பல்லேகல Pallekele மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடிவருகின்றது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இதன்மூலம் 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி […]

error: Content is protected !!