#GandhiTalks #VijaySethupathi #ArvindSwami #ARRahman #SilentFilm #TamilCinema #GandhiTalksTrailer #MakkalSelvan #TrendingNews #CinemaUpdate பொழுதுபோக்கு

மௌனத்தால் அதிரும் திரை! விஜய் சேதுபதி – அரவிந்த் சாமியின் ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர்!

  • January 28, 2026
  • 0 Comments

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘காந்தி டோக்ஸ்’ (Gandhi Talks) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் நேற்று (ஜனவரி 27) வெளியானது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள இந்தப் படம், வசனங்களே இல்லாத ஒரு ‘ப்ளாக் கொமடி’ (Black Comedy) மௌனப் படமாக உருவாகியுள்ளது. நேற்று வெளியான சுமார் 2 நிமிடம் 30 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லர், படத்தில் இருக்கும் இரண்டு மாறுபட்ட மனிதர்களின் உலகத்தைக் காட்டுகிறது. ஏழ்மையின் […]

இலங்கை

ரணில் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தீர்மானம்!

  • January 28, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், மார்ச் மாதத்தில் முறையான குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டமா அதிபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்கிரமசிங்க இன்று  நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினார். இதன்போது சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த சமர்ப்பணத்தை முன்வைத்தார். தொடர்புடைய செய்தி நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்!

ஐரோப்பா

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ட்ரோன் தாக்குதல் – 05 பேர் உயிரிழப்பு!

  • January 28, 2026
  • 0 Comments

உக்ரேனிய பயணிகள் ரயில் மீது ரஷ்யா நேற்று ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயிலில் 200இற்கும் அதிகமானோர் பயணித்த நிலையில்,  05 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை பயங்கரவாத செயல் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) குற்றம் சாட்டியுள்ளார். போரை நிறுத்துவதற்காக அபுதாபியில் இடம்பெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை குறைமதிப்பிற்கு உட்டுபடுத்தும் வகையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

இந்தியா செய்தி

கர்நாடகா முதல்வருடன் நாமல் சந்திப்பு: இரு தரப்பு உறவு குறித்தும் ஆராய்வு!

  • January 28, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, கர்நாடகா Karnataka மாநில முதல்வர் சித்தராமையாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பெங்களூரிலுள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ வதிவிடத்தில் இன்று (28) மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ இந்தியாவின் மிக மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவரை சந்தித்தது மகிழ்ச்சி. இந்தியா-இலங்கை இருதரப்பு உறவுகள், கர்நாடகாவின் வளர்ச்சி மற்றும் சமூக நல முயற்சிகள் குறித்து […]

செய்தி

உரிய திசையில் பயணிக்கும் இலங்கைப் பொருளாதாரம்: IMF பாராட்டு!

  • January 28, 2026
  • 0 Comments

டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் IMF குழு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் Anura Kumara Dissanayake பேச்சு நடத்தியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று 28) முற்பகல் மேற்படி சந்திப்பு நடைபெற்றது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த IMF பிரதிநிதிகள் குழு, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டனர். அனத்தங்களினால் […]

இலங்கை செய்தி

நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்!

  • January 28, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe இன்று (28) மதியம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் Magistrate’s Court முன்னிலையானார். ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றம் வரும் வழியில் நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் கூடி இருந்தனர். அவர்களுக்கு கையசைத்து நன்றி தெரிவித்துவிட்டு தனது சட்டத்தரணிகள் சகிதம் நீதிமன்றம் நோக்கி ரணில் சென்றார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், தனது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கு அரச நிதியை பயன்படுத்தினார் […]

இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – விசாரணை ஒத்திவைப்பு!

  • January 28, 2026
  • 0 Comments

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட பத்து சந்தேக நபர்களையும்  பிப்ரவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகர கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைக்கப்பட்டதாக பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்கள் மீது  […]

உலகம்

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறை தண்டனை!

  • January 28, 2026
  • 0 Comments

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியான யூன் சுக் இயோலின் (Yoon Suk Yeol)  மனைவிக்கு 20 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய யூனிஃபிகேஷன் சர்ச்சிலிருந்து (Unification Church) இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ்  கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு  இன்று  சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 12.85 மில்லியன் வோன் பணத்தை […]

இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து எதிரணிகள் ஆராய்வு!

  • January 28, 2026
  • 0 Comments

“சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் SJP பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara தெரிவித்தார். இது தொடர்பில் அனைத்து எதிரணிகளுடனும் கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் இன்று (28) கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய உரிமை மீறல், பாரபட்சம் உட்பட சில காரணங்களை அடிப்படையாகக்கொண்டே பிரேரணை முன்வைப்பது குறித்து கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணி கையொப்பம் திரட்டினாலும்அது இன்னும் […]

இலங்கை செய்தி

பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு பிரதிநிதி கொழும்பு வருகை!

  • January 28, 2026
  • 0 Comments

தமது விசேட பிரதிநிதியொருவரை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் Shehbaz Sharif இலங்கைக்கு அனுப்பியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் தொழில் மற்றும் உற்பத்தித்துறையின் விசேட உதவியாளர் ஹாரூன் அக்தர் கான் Haroon Akhtar Khan என்பவரே கொழும்பில் களமிறங்கியுள்ளார். பாகிஸ்தான் – இலங்கை கூட்டு பொருளாதார ஆணைக்குழுவின் 13ஆவது அமர்வில் அவர் பங்கேற்பதற்காகவே மூன்று நாள் பயணமாக அவர் இலங்கை வந்துள்ளார். மேற்படி அமர்வை வர்த்தகம், வாணிப, உணவு பாதுகாப்புப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஏற்பாடு […]

error: Content is protected !!