உலகம்

கொலம்பியாவில் விமான விபத்து: 15 பேர் பலி!

  • January 29, 2026
  • 0 Comments

கொலம்பியாவில் Colombia இடம்பெற்ற விமான விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர். கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்திலுள்ள கிராம பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அரசுக்கு சொந்தமான Satena என்ற விமான சேவை நிறுவனமே குறித்த விமான சேவையை வழங்கியுள்ளது. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்பதை கொலம்பியாவின் போக்குவரத்து அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். விமானம் பயணத்தை ஆரம்பித்து 12 நிமிடங்களில் தொடரை இழந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. விமான […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் பிற்போட திட்டம்?

  • January 29, 2026
  • 0 Comments

“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பி, இன்று ஆட்சியில் இருக்கும்போது மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara, தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ தலதாமாளிகைமீது தாக்குதல் நடத்திய கட்சியொன்றின் தலைவரே இன்று ஜனாதிபதியாக உள்ளார். இப்படியானவர்களிடம் எப்படி இன, மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்க […]

உலகம் செய்தி

சூடானுக்கு உதவ ஐ.நாவிற்கு 10 மில்லியன் டாலர் நிதி வழங்கிய சவுதி

  • January 28, 2026
  • 0 Comments

மோதலால் பாதிக்கப்பட்ட சூடானுக்கு குடிநீர் வழங்கவும் போரினால் சேதமடைந்த குழாய் வலையமைப்புகளை மறுசீரமைக்கவும் சவுதி அரேபியா(Saudi Arabia) ஐக்கிய நாடுகள் சபைக்கு 10 மில்லியன் டாலர் நிதி வழங்கியுள்ளது. சவுதி மேம்பாட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷத்(Sultan Abdulrahman Al-Marshad), ஐ.நாவுக்கான சூடானிய நிரந்தர பிரதிநிதி ஹசன் ஹமீத் ஹசன்(Hassan Hamid Hassan) மற்றும் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் பர்ஹாம் சாலிஹ்(Barham Salih) ஆகியோர் சுவிட்சர்லாந்தின்(Switzerland) ஜெனீவாவில்(Geneva) ஒரு மானிய ஒப்பந்தத்தில் […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி நபர் கைது

  • January 28, 2026
  • 0 Comments

கிழக்கு லண்டனில்(London) ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 57 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இல்ஃபோர்டின்(Ilford) ஆப்பிள்கார்த் டிரைவில்(Applegarth Drive) உள்ள ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தில் தலீப் சத்தா(Dalip Chadha) என்ற நபர் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர் அவரது மனைவி என்று நம்பப்படுகிறது, இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை, ஆனால் பாதிக்கப்பட்டவர் 58 வயதான வனேசா பன்ட்னி-சத்தா(Vanessa Puntney-Chadha) என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

17 மாதங்களுக்கு பிறகு பொதுவில் தோன்றிய வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்

  • January 28, 2026
  • 0 Comments

வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் டெல்சா சோலோர்சானோ(Delsa Solorzano) 17 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக பொதுவில் தோன்றியுள்ளார். சோலோர்சானோ பல மாதங்களுக்கு பிறகு தனது கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்தார், அங்கு அவருக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது. நிக்கோலஸ் மதுரோவின்(Nicolas Maduro) வெளியேற்றத்திற்குப் பிறகு பொதுவில் தோன்றிய 54 வயதான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், “அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரவும் அரசாங்கத்தை புதுப்பிக்கவும் புதிய தேர்தல்களுக்காகப் போராடுவதற்கும் தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சோலோர்சானோ கடைசியாக ஆகஸ்ட் மாதம் […]

செய்தி விளையாட்டு

நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி

  • January 28, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இன்று நான்காவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில்(Visakhapatnam) நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில், டெவோன் கோன்வே(Glenn Phillips) 44 ஓட்டங்களும் டிம் […]

உலகம் செய்தி

இந்தோனேசியா மண்சரிவு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

  • January 28, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில்(Indonesia) ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பலரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா(West Java) மாகாணத்தில்மேற்கு பண்டுங்(West Bandung) பகுதியிலுள்ள கிராமமொன்றிலேயே இன்று இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 34 பேர் அடையாளம் காணப்பட்டதாக தேசிய பேரிடர் தணிப்பு முகமை செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி(Abdul Muhari) தெரிவித்துள்ளார். மேலும், “அடையாளம் காணப்பட்ட உடல்கள் அடக்கம் செய்வதற்காக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். […]

Dhanush Sons Yatra Linga, Dhanush viral video Tirupati, தனுஷ் திருப்பதி தரிசனம். பொழுதுபோக்கு

திருப்பதியில் தனுஷை சூழ்ந்த ரசிகர்கள்: மகன்களின் செயலால் நெகிழ்ந்த இணையதளம்!

  • January 28, 2026
  • 0 Comments

பிரபல தமிழ் நடிகரும், இயக்குநருமான தனுஷ், தனது மகன்களான லிங்கா மற்றும் யாத்ராவுடன் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். குடும்பத்துடன் அவர் மேற்கொண்ட இந்த ஆன்மீகப் பயணம் குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. நேற்று இரவு (ஜனவரி 27) திருப்பதி மலைக்கு வந்தடைந்த தனுஷ், இன்று அதிகாலை நடைபெற்ற புகழ்பெற்ற சுப்ரபாத சேவையில் தனது மகன்களுடன் கலந்து கொண்டார். பாரம்பரியமான பட்டு வேட்டி மற்றும் அங்கவஸ்திரம் […]

இலங்கை செய்தி

முல்லைத்தீவில் 41 வயது நபர் ஒருவர் அடித்து கொலை

  • January 28, 2026
  • 0 Comments

முல்லைத்தீவு(Mullaitivu) ஒட்டுசுட்டான்(Ottusuddan) பிரதேசத்தின் கரடிப்புலவு(Karadipulavu) கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த 41 வயது நபர், கடைக்கு சென்று உணவு வாங்கி வந்து கொண்டிருந்த வேளையில் அவரது தலையின் பின்பகுதியில் தாக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், குறித்த நபரின் உடல் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்தி

அமெரிக்க பயிற்சி பெற்ற இலங்கையின் முதல் கடற்படை அதிகாரி மரணம்

  • January 28, 2026
  • 0 Comments

அமெரிக்க கடற்படை சீல்(SEAL) பயிற்சியை வெற்றிகரமாக முடித்த முதல் இலங்கையர் என்ற பெருமை சேர்த்த படைப்பிரிவு அதிகாரி கோயன் சமிதா(Koyan Chamitha) காலமானார். 28 வயதான படைப்பிரிவு அதிகாரி கோயன் சமித, வெலிசரா(Welisara) கடற்படை முகாமில் உள்ள கடற்படை குடியிருப்புக்குள் இறந்து கிடந்துள்ளார். கம்பஹாவைச்(Gampaha) சேர்ந்தவரும் பண்டாரநாயக்க(Bandaranaike) கல்லூரியின் முன்னாள் மாணவருமான சமித, கலிபோர்னியாவில்(California) கடுமையான பயிற்சிக்குப் பிறகு மதிப்புமிக்க சீல் ட்ரைடென்ட் விருதைப் பெற்று 2025ம் ஆண்டில் சர்வதேச சிறப்பைப் பெற்றார். இலங்கை கடற்படையின் சிறப்பு […]

error: Content is protected !!