உலகம்

வளைகுடா நாடுகள் நோக்கி பயணிக்கும் அமெரிக்க கப்பல்கள் – ஈரானுக்கு 02 நிபந்தனை!

  • January 30, 2026
  • 0 Comments

வளைகுடா நாட்டில் அதிகரித்து வரும் பதற்றங்களை தவிர்க்க ஈரான் இரண்டு விடயங்களை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். “முதலாவது, அணு ஆயுதம் வேண்டாம். இரண்டாவது, எதிர்ப்பாளர்களைக் கொல்வதை நிறுத்துங்கள்,” என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். “எங்களிடம் இப்போது ஈரானுக்குப் பயணிக்கும் மிகப் பெரிய, மிகவும் சக்திவாய்ந்த கப்பல்கள் ஏராளமாக உள்ளன, அவற்றை நாம் பயன்படுத்த வேண்டியதில்லை என்றால் நன்றாக இருக்கும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அணு ஆயுதத் திட்டத்தில் ஒரு ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா […]

இலங்கை செய்தி

டித்வா புயல்: சர்வதேச கொடையாளர் மாநாடு இழுபறியில்!

  • January 30, 2026
  • 0 Comments

இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்ட சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. 2026 ஜனவரி மாதம் குறித்த மாநாடு நடத்தப்படும் என 2025 இறுதியில் அரச தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் அது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள தாமதமானது மீள் கட்டமைப்பு நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில், பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்புக்கு மேலதிகமாக 500 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. […]

இலங்கை

ஏறிய வேகத்தில் திடீரென குறைந்த தங்கத்தின் விலை!

  • January 30, 2026
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால், நாட்டில் தங்கத்தின் விலை  20,000 குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (30) காலை  கொழும்பு  தங்க சந்தை நிலவரங்களின்படி,    “22 காரட்” தங்கத்தின் விலை  368,000 ரூபாயாகக் குறைந்துள்ளது. நேற்று (29)  386,400 ரூபாயாக  பதிவாகியிருந்தது. இதற்கிடையில், நேற்று  420,000 ஆக இருந்த “24 காரட்” தங்கத்தின் விலை இன்று  400,000 ரூபாயாகக்  குறைந்துள்ளது.

உலகம்

சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அழைப்பு விடுக்கும் சீனா!

  • January 30, 2026
  • 0 Comments

சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு சர்வதேச சட்ட அமலாக்க ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தொடர்ந்து செயல்படும் என்று கூறுகிறது. சர்வதேச சைபர் குற்றம் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன்  (Guo Jiakun) இந்த கருத்துக்களை தெரிவித்தார். சீனா சமீபத்தில் மியான்மர் உள்ளிட்ட நாடுகளுடன் தீவிரமாக ஒத்துழைப்பதன் மூலம் சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சைபர் குற்றம் மற்றும் மோசடி குற்றங்களை முழுமையாக […]

அரசியல் இலங்கை செய்தி

ஒற்றையாட்சியைக் காக்க கூடிய ஒரே தலைவர் நாமல்: சரத் வீரசேகர புகழாரம்!

  • January 30, 2026
  • 0 Comments

“பௌத்த சாசனம்மீது விமர்சனக்கணை தொடுக்கும் NPP அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும்.” – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara. தெரிவித்தார். “ எனது நாட்டில் சாசனம் மற்றும் வளங்களை பாதுகாக்க வேண்டுமெனில் ஒற்றையாட்சியை பாதுகாக்க வேண்டும். ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது நாமல் ராஜபக்சதான்.” -எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார். தமக்குரிய வாக்கு குறையும் […]

உலகம்

வெனிசுலாவிற்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்கும் அமெரிக்க எயார்லைன்ஸ்!

  • January 30, 2026
  • 0 Comments

வெனிசுலா மீதான இராணுவ தலையீடுகளை தொடர்ந்து மீளவும் விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க எயார்லைன்ஸ் (American Airlines) நேற்று அறிவித்துள்ளது. ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவை தொடர்ந்து விமானங்களை இயக்குவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி ( Sean Duffy) , அமெரிக்க விமான நிறுவனங்கள் வெனிசுலாவிற்கு பறப்பதைத் தடைசெய்த 2019 ஆம் ஆண்டு உத்தரவை ரத்து செய்துள்ளார். விமான சேவையைத் தொடர்ந்து நிறுத்தி வைப்பது இனி பொது […]

அரசியல் செய்தி

தனி வழியா, கூட்டணியா? தெற்கு அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திப்பு!

  • January 30, 2026
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றிகரமான திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருகின்றது. இதன் அடுத்தக்கட்டமாக இரு கட்சிகளின் தலைவர்களும் நேரடி சந்திப்பை நடத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடு தற்போது இடம்பெற்றுவருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி உதயமாகி எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் ஆறாண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்னதாக இருவரும் நேரடி சந்திப்பில் ஈடுபடுவார்கள் என தெரியவருகின்றது. இதன்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் […]

பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நட்சத்திரங்கள்!

  • January 30, 2026
  • 0 Comments

தமிழக அரசு 2014 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்திற்கான திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய்​சேதுப​தி, கார்த்​தி, தனுஷ், ஆர்​.​பார்த்​திபன், சூர்​யா, ஆர்​யா, விக்​ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்​களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கீர்த்தி சுரேஷ், நயன்​தா​ரா, ஜோதி​கா, மஞ்​சு​வாரி​யர், அபர்​ணா​பால​முரளி, லிஜோமோல்​ஜோஸ், சாய்​பல்​லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாக​வும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெரு​மாள், அசுரன், கூழாங்​கல், ஜெய்​பீம், கார்கி ஆகியவை சிறந்த திரைப்​படங்​களாக பட்டியலிடப்பட்டுள்ளன. கலைத்துறை சாதனையாளர்களுக்கு தங்கப் பதக்கங்கள், […]

இந்தியா

கருப்பு பெட்டி மீட்பு: விசாரணை தீவிரம்!

  • January 30, 2026
  • 0 Comments

மகாராஷ்டிராவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது. மேற்படி விமான விபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட ஐவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். துணை முதல்வரின் இறுதிச்சடங்கு பூரண அரச மரியாதையுடன் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய மத்திய விமான போக்குவரத்து துறை உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். மத்திய விமான போக்குவரத்து துறைக்கு கடிதமும் அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் மேற்படி கடிதத்துக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

Systems change நாசமாகிவிட்டது: சாடுகிறார் நாமல்!

  • January 30, 2026
  • 0 Comments

“Systems change” எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இருக்கின்ற சிஸ்டத்தையும் குழப்பியுள்ளனர். தமது இயலாமையை மூடிமறைக்கவே எம்மை இலக்கு வைக்கின்றனர்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். “இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் சிறப்புரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தேன். நானும், எமது கட்சி பிரமுகர்களும் சென்றிருந்தோம். இது அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இறுதியானது அல்ல, இன்னும் பல நிகழ்வுகளுக்கு எதிர்காலத்தில் செல்லவுள்ளேன். மக்களுக்கு வழங்கிய […]

error: Content is protected !!