இலங்கை செய்தி

இலங்கை துறைமுக பாதுகாப்பு பிரிவுக்கு அமெரிக்க நிபுணர்கள் பயிற்சி!

  • January 31, 2026
  • 0 Comments

அமெரிக்க கடற்படையின் Us Navy வெடிபொருள் அகற்றும் நிபுணர்கள் , இலங்கை துறைமுக அதிகாரசபையின் Sri Lanka Ports Authority பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் துறைமுக தீயணைப்புப் படையினருக்கு பயிற்சியளித்துள்ளனர். இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு விடயங்களை கையாள்வது CBRN தொடர்பிலேயே இப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ துறைமுகங்கள் பாதுகாப்பானவையாக இருக்கும்போது, வர்த்தகம் தொடர்ந்து இடம்பெறும். மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். இரசாயன, உயிரியல், […]

இந்தியா

இந்தியாவிலும் அமுலுக்கு வரும் சமூக ஊடகத் தடை?

  • January 31, 2026
  • 0 Comments

இந்தியாவில் 16 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்வது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடக தளங்களால் சுமார் 12 மில்லியன் சிறார்கள் பாதிக்கப்படுவதாக கணக்கெடுப்பொன்றில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மூன்று இந்திய மாநிலங்களில் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகளை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாஜகவின் முக்கிய கூட்டாளியான ஒருவர், 16 வயதுக்குட்பட்ட எவரும் சமூக ஊடகக் […]

இலங்கை செய்தி

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் “நீதிக்கான சாட்சி” என்ற நூதன போராட்டம்

  • January 31, 2026
  • 0 Comments

1996 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்றையதினம் யாழ். சிவகுரு ஆதீனத்தில் “நீதிக்கான சாட்சி” என்ற நூதன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதே போன்ற ஒரு நாளில் (1996.01.31) கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதியின் 31 ஆவது ஆண்டை […]

கருத்து & பகுப்பாய்வு

ஒரு வாரம் முடங்குமா பிரித்தானியா? – புலம்பெயர்வோருக்கு எதிரான ஒருவார மாபெரும் வேலைநிறுத்தம்

  • January 31, 2026
  • 0 Comments

புலம்பெயர்தல் விவகாரத்தை மையமாகக் கொண்டு பிரித்தானிய அரசியலில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அரசின் குடிவரவு கொள்கைகள், பொருளாதார அழுத்தங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் ஒன்றிணையும் சூழலில், “The Great British National Strike” என்ற அமைப்பு நாடு முழுவதும் ஒரு வார வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. புலம்பெயர்வோருக்கு எதிரான இந்த போராட்டம், அரசியல் கவனத்தை ஈர்க்கும் முயற்சியா அல்லது நடைமுறையில் சாத்தியமற்ற ஒரு அழுத்த அரசியலா என்ற கேள்வியை தற்போது பிரித்தானிய சமூகத்தில் […]

இந்தியா

மகாராஷ்டிர அரசியல் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • January 31, 2026
  • 0 Comments

மகாராஷ்டிர Maharashtra, மாநிலத்தின் துணை முதல்வர் மறைந்த அஜித் பவாரின் பாரியாரான சுனேத்ரா பவார் Sunetra Pawar , தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பதவியேற்றார். மகாராஷ்டிர மாநில அரசியல் வரலாற்றில் பெண்ணொருவர், துணை முதல்வர் பதவிக்கு வருவது இதுவே முதன்முறையாகும். லோக் பவனில் சிறிய அளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. சுனேத்ரா பவாருக்கு மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். […]

உலகம்

நிறைவடைந்த காலக்கெடு : பரபரப்பான சூழ்நிலையில் புட்டினை சந்தித்த ஈரான் அதிகாரி!

  • January 31, 2026
  • 0 Comments

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி ( Ali Larijani) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) நேற்று சந்தித்துள்ளார். இதன்போது மத்தியக் கிழக்கில் நீடித்து வரும் அமைதியின்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு அமெரிக்கா வழங்கிய காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. ஒப்பந்தத்தை எட்டாவிட்டால் ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். […]

செய்தி தமிழ்நாடு

வரவிருக்கும் தேர்தல் திராவிடத்துக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையே நடக்கும் போர்

  • January 31, 2026
  • 0 Comments

மாநிலங்களை அழிக்கத் துடிக்கும் பாஜக, அனைத்து மாநிலங்களிலும் பொம்மை அரசுகளை அமைக்க விரும்புகிறது என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என்டிடிவி நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழகத்தைக் கைப்பற்ற எடுக்கும் பாஜகவின் எந்த முயற்சியும் பலனளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வரவிருக்கும் தேர்தல் திராவிடத்துக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான நடக்கும் போராக இருக்கப்போகிறது என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் திராவிட கருத்தியல் என்பது அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டால், அது […]

இலங்கை செய்தி

அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட 08 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்

  • January 31, 2026
  • 0 Comments

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடன் அமலுக்கு வரும் வகையில் 08 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஈ.எம்.ஜி.ஜே. சேரம் காலி பிரிவிலிருந்து, ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.சி.ஏ. […]

பொழுதுபோக்கு

ஒருவழியாக திரைக்கு வரும் ஜனநாயகன் திரைப்படம்! எப்போது தெரியுமா?

  • January 31, 2026
  • 0 Comments

நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் சர்ச்சைகளை தாண்டி வெளியீட்டிற்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி திரைக்கு வரவிருந்த இந்த படம் சென்சார் சான்றிதழ் இழுபறியால் தள்ளிப்போனது. இந்நிலையில் படக்குழுவினர் சென்சார் சான்றிதழை பெறுவதற்கான நீதிமன்றத்தை நாடினர்.  முதலில் தனி நீதிபதி படத்தை வெளியிடலாம் என்று உத்தரவு பிறப்பித்தார். பின்னர் சென்சார் வாரியம் அதனை எதிர்த்து மேன்முறையீடு செய்தது. பிறகு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு ஜனநாயகன் விவகாரம் சென்றது. […]

இலங்கை செய்தி

சட்டவிரோத மணல் அகழ்வு மீண்டும் அதிகரிப்பு

  • January 31, 2026
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெளிகண்ட்டல் ஆற்றுப்பகுதி மற்றும் வயல்ப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆற்றுப் படுக்கை மற்றும் வயல் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் மணல்களை சட்டவிரோதமான முறையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இரவு வேளைகளில் உழவு இயந்திரத்தின் மூலம் அகழ்வு செய்யப்பட்டு வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் டிப்பர் […]

error: Content is protected !!