இலங்கை செய்தி

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்குவோருக்கான மகிழ்ச்சி செய்தி

  • February 2, 2026
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 12,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின்விலை 368,000 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 338,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தின் […]

அரசியல் இலங்கை செய்தி

ரணில், நாமல் சங்கமம்? மொட்டு கட்சி மறுப்பு!

  • February 2, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் UNP ஒன்றிணையவுள்ளன என வெளியாகும் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP நிராகரித்துள்ளது. கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இரு தரப்பு இணைவு தொடர்பில் மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்திடம் Sagara Kariyawasam கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பவற்றுக்கிடையில் கொள்கை வேறுபாடுகள் உள்ளன. […]

உலகம்

அமெரிக்காவில் 1 இலட்சத்து 78 ஆயிரம் கட்டிடங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!

  • February 2, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 1200 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாகவும் ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் வானிலை அமைப்பு வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மிகக் கடுமையான தாக்கங்கள் கடலோரப் பகுதிகளில் உணரப்படும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்திய குளிர்கால வானிலை அமெரிக்க மின் கட்டமைப்புகளில், குறிப்பாக கரோலினாஸில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கின் சில பகுதிகளில் மின் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீ – போராடும் தீயணைப்பு வீரர்கள்!

  • February 2, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் (Adelaide) காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதனை அணைக்க சுமார் 250 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும், 20 க்கும் மேற்பட்ட சொத்துக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதுவரை சுமார் 960 ஹெக்டேயர்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை உச்சம் தொட்டுள்ளது. சுமார் 50 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ஐரோப்பா

விசாரணைக்கு வரும் நோர்வே இளவரசர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்!

  • February 2, 2026
  • 0 Comments

நோர்வேயின் பட்டத்து இளவரசரான மரியஸ் போர்க் ஹோய்பி (Marius Borg Høiby) பாலியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவருடைய வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒஸ்லோ (Oslo) மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக 38 குற்றச்சாட்டுகளுக்கான குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் கற்பழிப்பு, ஒரு முன்னாள் துணைக்கு எதிரான நெருங்கிய உறவில் துஷ்பிரயோகம், மற்றொருவருக்கு எதிரான வன்முறைச் செயல்கள் மற்றும் 3.5 கிலோ (7.7 பவுண்டுகள்) கஞ்சாவை வைத்திருந்தமை ஆகியவை முக்கிய குற்றச்சாட்டுகளாகும். அத்துடன் […]

விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ICC எச்சரிக்கை!

  • February 2, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் அணி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை ICC எச்சரிக்கை விடுத்துள்ளது. 2026 T20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் புறக்கணிக்கப்படலாம் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டமானது அதிக வர்த்தக மதிப்பு கொண்ட போட்டி என்பதால், அதனை தவிர்ப்பது பாதிப்பாக அமையுமென ஐ.சி.சி. ICC கருதுகின்றது. மேலும், இது நியாயமான போட்டி, விளையாட்டு ஒழுக்கம் மற்றும் சமத்துவம் என்ற […]

இந்தியா

இந்திய பாதீட்டில் இலங்கைக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு!

  • February 2, 2026
  • 0 Comments

இந்தியாவின் 2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வரவு- செலவுத் திட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. பாதீட்டு தரவுகளின் அடிப்படையில் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான வெளிநாடுகளுக்கான மொத்த இந்திய உதவி 56.86 பில்லியன் (இந்திய ரூபா) முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கைக்கான உதவியை இந்தியா 4 பில்லியன் இந்திய ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டுக்கான பாதீட்டில் இலங்கைக்காக 3 பில்லியன் […]

அரசியல் இலங்கை செய்தி

“வடக்கிலிருந்து படைகளை முற்றாக அகற்ற தமிழ் மக்கள் எதிர்ப்பு”

  • February 2, 2026
  • 0 Comments

” வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை முழுமையாக அகற்றுவதற்கு தமிழ் மக்கள் விரும்பவில்லை. அவை இருப்பதால்தான் தமக்கு பாதுகாப்பு என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச Wijeyadasa Rajapaksa தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ தைப்பொங்கல் விழாவுக்காகவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றார். தமிழ் மக்களின் மனங்களில் “வைரஸை” விதைத்தார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை காட்ட முனைந்தார். ஏனைய ஜனாதிபதிகளைவிட அநுரவுக்கு வடக்கு, […]

உலகம்

கிராமி விருது விழாவில் குடியேற்ற முகவர்களுக்கு எதிராக முழங்கிய கலைஞர்!!

  • February 2, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் குடியேற்ற முகவர்களுக்கு எதிராக பல கலைஞர்கள் தங்கள் எதிர்ப்பை  வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் கிராமி விருதுகளில் சிறந்த இசை  ஆல்பத்திற்கான விருதை பெற்றுக்கொண்ட பாடகர் பேட் பன்னி (Bad Bunny), மேடையில் பேசும்போது கூட்டாட்சி முகவர்களின் செயற்பாட்டை விமர்சித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், கடவுளுக்கு நன்றி சொல்வதற்கு முன், நான் ‘ஐஸ் அவுட்’ என்று சொல்லப் போகிறேன். “இந்த நாட்களில் வெறுப்பு இல்லாமல் இருப்பது கடினம் என்று எனக்குத் தெரியும். வெறுப்பை விட சக்தி […]

செய்தி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: சந்தேக நபர்களுக்கு மறியல் நீடிப்பு!

  • February 2, 2026
  • 0 Comments

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் மேலும் 6 சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்ட சம்பவத்தின்போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (02) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த குழுவினரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!