இந்தியா தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு பரிந்துரை!

  • February 2, 2026
  • 0 Comments

தமிழக அரசியலில் இரும்பு பெண்ணாகக் கருதப்பட்ட முன்னாள் முதல்வர் அமரர் ஜெயலலிதாவுக்கு Jayalalithaa பாரத ரத்னா Bharat Ratna விருது வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. AIADMK நாடாளுமன்ற உறுப்பினர் தனபால் Dhanapal மேற்படி கோரிக்கையை மாநிலங்களவையில் Rajya Sabha முன்வைத்துள்ளார். ‘‘ தமிழ்நாட்டின் மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எனவே, அவருக்கு நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத் ரத்னா விருது வழங்கப்படுதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். நிர்வாகத் […]

ஐரோப்பா

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் சுரங்க தொழிலாளர்களை தாக்கிய ரஷ்யா!

  • February 2, 2026
  • 0 Comments

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்மொழிந்துள்ள வரைவுத் திட்டத்தைப் பற்றி விவாதிக்க உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த வாரம் கூடவுள்ளன. இந்த தகவலை உக்ரைன் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய இம்மாதம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் அபுதாபியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே தொடர்புடைய அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் ரஷ்ய படைகள் உக்ரைனின் டினிப்ரோ (Dnipro) பகுதியில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சுரங்க தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின்மீது […]

இலங்கை செய்தி

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் – ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

  • February 2, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக அவர் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமிந்திர ராஜபக்ச தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நிலையில் அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த கால அரசாங்கத்தின் போது ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்களைக் […]

இலங்கை

78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு சிறப்பு மன்னிப்பு!

  • February 2, 2026
  • 0 Comments

பிப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படும் 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு சிறப்பு  மன்னிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 34வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த மன்னிப்பு வழங்கப்படும். அதன்படி, தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு அவர்கள் சிறையில் இருந்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வார நிவாரணம் வழங்கப்படும் என்று சிறைச்சாலைகள் துறை தெரிவித்துள்ளது. கூடுதலாக,   75,000 ரூபாய்க்கும் குறைவான அபராதம் செலுத்தப்படாததால் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கான […]

இலங்கை செய்தி

யாழ். அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் உலக ஈர நில தினம் அனுஷ்டிப்பு

  • February 2, 2026
  • 0 Comments

ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் சர்வதேச உலக ஈர நில தினம் இன்றைய தினம் (02.02.2026) அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில், உலக ஈர நில தினம் யாழ் மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் திரு. லோ.கி […]

உலகம்

10 ஆண்டுகள் சிறை செல்லும் ஷேக் ஹசீனா!

  • February 2, 2026
  • 0 Comments

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அரசு வீட்டுவசதித் திட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும்  இரண்டு தனித்தனி ஊழல் வழக்குகளில் அவர் குற்றவாளியாக கண்டறியப்பட்டதை அடுத்து மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரபியுல் ஆலம்,  ஒவ்வொரு வழக்கிலும் 05 ஆண்டு சிறை தண்டனை என்பதற்கு அமைய இரண்டு வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். புர்பச்சோலில் (Purbachol) உள்ள ராஜுக் நியூ […]

அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதி பதவியை குறிவைக்கிறாரா நிமல்?

  • February 2, 2026
  • 0 Comments

“ ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை. கட்சியை கட்டியெழுப்ப அனைவரும் பாடுபட வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் SLFP தலைவர் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா Nimal Siripala de Silva தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியென்பது பழமையான – பலம்பொருந்திய கட்சியாகும். அக்கட்சியைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டும். கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். முதலில் கட்சிக்குள் […]

உலகம்

மியன்மாரில் மோசடி மையங்களை நடத்திய நால்வரை தூக்கிலிட்ட சீனா!

  • February 2, 2026
  • 0 Comments

மியான்மரில் மோசடி மையங்களை நடத்திய நால்வரை தூக்கிலிட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய அவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக மியன்மாரின் எல்லை பகுதிகளில் மாஃபியா கும்பல்கள் அல்லது பிரபல குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அவர்கள் கேசினோக்கள், சிவப்பு விளக்கு மாவட்டங்கள் மற்றும் சைபர்ஸ்கேம் நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்நிலையில் குறித்த நபர்களை கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். அவர்கள் மீது கொலை, மற்றும் […]

இலங்கை செய்தி

சிங்கள பிரதேசங்களுக்கு நீரைக் கொடுப்பதற்கே கிவுல் ஓயா திட்டம் – போராட்ட களத்தில் சுமந்திரன் ஆதங்கம்

  • February 2, 2026
  • 0 Comments

தமிழ் பிரதேசம் முழுவதையும் நீருக்குள் அமிழ்த்தி அதிலிருந்து வருகின்ற நீர்ப்பாசனத்தின் மூலமாக ஏற்கனவே குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள பிரதேசங்களுக்கு நீரைக் கொடுப்பதற்காகவே கிவுல் ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வுவுனியா , நெடுங்கேணியில் கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக இன்று (02) முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “பல தசாப்தங்களுக்கு முன்னராகவே […]

இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்திற்கான எதிர்ப்பு போராட்டம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

  • February 2, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (02) நெடுங்கேணியில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு போராட்டம் காலை 10.30 க்கு நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகியது. திட்டத்திற்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி நெடுங்கேணி பிரதேச செயலாளரை […]

error: Content is protected !!