உலகம்

எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாரான அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி!

  • February 3, 2026
  • 0 Comments

அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனும் (Bill Clinton) முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனும் (Hillary Clinton) ஒப்புக்கொண்டுள்ளனர். பில் கிளிண்டனின் செய்தித் தொடர்பாளர் ஏஞ்சல் யுரேனா (Angel Ureña) ஹவுஸ் மேற்பார்வைக் குழுத் தலைவர் ஜேம்ஸ் கோமர், ஆர்-கை (Chair James Comer, R-Ky) எழுதிய கடிதத்திற்கு நேற்று பதிலளித்துள்ளார். அதில் , கிளிண்டன்கள் “நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்” என்று குறிப்பிட்டுள்ளார். […]

விளையாட்டு

ICC T-20 உலக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு!

  • February 3, 2026
  • 0 Comments

ஐ.சி.சி. T-20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேரடங்கிய அணியில் தனஞ்சய டி சில்வா, ப்ரமோத் மதுஷான் ஆகிய இருவருக்கும் இடமளிக்கப்படவில்லை. இங்கிலாந்து அணியுடனான தொடர்பில் இணைக்கப்படாத கமிந்து மெண்டிசுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டங்களில் பிரகாசித்த 23 வயதான இளம் வீரர் பவன் ரத்நாயக்க முதல் தடவையாக உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்துள்ளார். இலங்கை அணி விவரம் வருமாறு, தசுன் ஷானக்க (தலைவர்) பெத்தும் நிஸ்ஸங்க காமில் மிஷார குசல் மெண்டிஸ் […]

இலங்கை செய்தி

காணி விடுவிப்பு குறித்து வடக்கு ஆளுநர், படை தளபதி ஆராய்வு!

  • February 3, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (03.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை இன்று சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி […]

ஆஸ்திரேலியா

இஸ்ரேல் ஜனாதிபதி வருகை: சிட்னியில் போராட்டங்களுக்கு தடை!

  • February 3, 2026
  • 0 Comments

இஸ்ரேல் ஜனாதிபதியின் Isaac Herzog வருகைக்கு எதிராக சிட்னியில் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், போராட்டங்கள்மீதான தடையை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நீடித்துள்ளது. சிட்னி, போண்டி கடற்கரையில் டிசம்பர் 14 ஆம் திகதி யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. யூத சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியது. இந்நிலையில் தமது நாட்டுக்கு வருகை தருமாறு […]

அரசியல் இலங்கை செய்தி

மகாபாரத அர்ச்சுனனே நான்: அர்ச்சுனா எம்.பி. கருத்து!

  • February 3, 2026
  • 0 Comments

“மகாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர்கள்போலவே எனது குடும்பத்திலும் ஐந்து ஆண் பிள்ளைகள். அதனால்தான் எனக்கு அர்ச்சுனா என பெயர் வைத்தனர்.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Arjuna தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு (02) ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “எனது தந்தை இலங்கை சுங்கத்திலும், இலங்கை பொலிஸிலும் சேவையாற்றியவர். இலங்கை பொலிஸ் கால்பந்தாட்ட அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். கறுப்பு ஜுலைக்கு […]

இந்தியா

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம் – வரி குறைப்பை அறிவித்தார் ட்ரம்ப்!

  • February 3, 2026
  • 0 Comments

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 25 சதவீத வரியை 18 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திய பிறகு, வரிகளைக் குறைக்க ட்ரம்ப் நிர்வாகம் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரி […]

அரசியல் இலங்கை செய்தி

ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் நிமல் விடுத்துள்ள அறிவிப்பு!

  • February 3, 2026
  • 0 Comments

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை ஆராயும்போது, ஆட்சி கவிழ்ப்பு பணியை எதிரணி செய்யவேண்டியதில்லை. அவர்களாகவே தம்மை கவிழ்த்துக்கொள்வார்கள்.” இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் SLFP நிமல் சிறிபால டி சில்வா Nimal Siripala de Silva தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ அரசியல் களத்தில்போன்று வேறு எங்கும் பாரிய சவால்கள் கிடையாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டும் அல்ல, அனைத்து கட்சிகளுக்குள்ளும் இன்று உள்ளக மோதல் உள்ளது. […]

இலங்கை செய்தி

தமிழர்களின் தொல்லியல் இடங்கள் அழிக்கப்படும் – யாழ் நூலக எரிப்பின் தொடர்சியே கிவுல் ஓயா

  • February 2, 2026
  • 0 Comments

கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்படுத்தினால் தமிழர்களுடைய வரலாற்றைப் பறைசாற்றும் 47தொல்லியல் இடங்கள் அழிக்கப்படும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார். இந்த திட்டடத்திற்கு எதிராக இன்று நெடுங்கேணியில் இடம்பெற்ற பேரணியில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். கடந்தகால அரசு யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்து எவ்வாறு தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழித்தார்களோ, அதேபோல தற்போதைய அரசு கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்படுத்தி தமிழர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் 47தொல்லியல் இடங்களை அழிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் […]

உலகம்

காசநோய் பரவல் – கலிபோர்னியாவில் மூடப்பட்ட பிரபல பாடசாலை!

  • February 2, 2026
  • 0 Comments

கலிபோர்னியா மாநிலத்தின் தலைநகர்  சான் பிரான்சிஸ்கோவில் (San Francisco) உள்ள ஆர்ச்பிஷப் ரியோர்டன் (Archbishop Riordan) உயர்நிலைப் பாடசாலை வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. காசநோய் பரவல் காரணமாக ஏராளமான  மாணவர்கள் மற்றும் ஊழியர்கள்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வரும் 09 ஆம் திகதிவரை நேரடி கற்றல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதன் பிறகு எதிர்மறையான சோதனை முடிவுகள் உள்ளவர்கள் மட்டுமே பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த வெடிப்பால் பொதுமக்களுக்கு ஏற்படும் […]

ஐரோப்பா

சட்டவிரோத புலம்பெயர்தலை ஊக்குவிக்கும் ஊடக பயனர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை!

  • February 2, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் சட்டவிரோத வழிகளில் புலம்பெயர்தல் பற்றி விளம்பரப்படுத்தும் சமூக ஊடக பயனர்களுக்கு எதிராக இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பயனர்களுக்கு 05 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) ஆன்லைன் தொடர்பு மையம், ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான சமூக ஊடக கணக்குகளை ஆராயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 13 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆங்கிலக் கால்வாயை கடந்து புலம்பெயர்ந்தோர் இன்று இங்கிலாந்திற்கு […]

error: Content is protected !!