ஐரோப்பா

சிறப்பு வங்கி விடுமுறையை அறிவித்த ஸ்கொட்லாந்து அரசாங்கம்!

  • February 5, 2026
  • 0 Comments

1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்காட்லாந்து  அணி உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் வங்கி விடுமுறையை அறிவித்துள்ளது. இதன்படி ஜூன் மாதம்  15 ஆம் திகதி   அன்று  வங்கி விடுமுறை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து ஆண்கள் தேசிய அணி ஜூன் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹைட்டிக்கு எதிரான முதல் போட்டியை இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 2 மணிக்கு தொடங்கும். இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முதல் அமைச்சர் ஜான் […]

இலங்கை செய்தி

இலங்கையுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது இத்தாலி!

  • February 5, 2026
  • 0 Comments

இத்தாலி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கெப்டன் (Navy) Armando Paolo SIMI, இன்று பிற்பகல் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் மரியாதை நிமித்தம் இச்சந்திப்பு இடம்பெற்றது. வரவேற்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இத்தாலி பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய இருவரும் இருதரப்பு முக்கியத்துவம்மிக்க விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர். அத்துடன், இரு நாடுகளுக்கிடையே நிலவும் பரஸ்பர உறவுகள் நினைவு கூரப்பட்டதுடன், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேலும் […]

பொழுதுபோக்கு

இணையத்தில் வைரலாகி வரும் பூக்கி படத்தின் புடிக்கலே  பாடல்

  • February 5, 2026
  • 0 Comments

பூக்கி படத்தில் இடம்பெற்றுள்ள புடிக்கலே புடிக்கலே பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் “பூக்கி”. இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கும் இந்தப் படத்தின் மூலம் நடிகர் அஜய் திஷன் நாயகனாக அறிமுகமாகின்றார். இவர் மார்கன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பூக்கி படத்தில் நாயகியாக தனுஷா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, சுனில், பாண்டியராஜன், விவேக் பிரசன்னா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய […]

இலங்கை செய்தி

சௌமியமூர்த்தி தொண்டமான் தேசிய தலைவர்: ராதாகிருஷ்ணன் புகழாரம்!

  • February 5, 2026
  • 0 Comments

“சௌமியமூர்த்தி தொண்டமான் Soumyamoorthy Thondaman என்பவர் தேசிய தலைவர்களுள் ஒருவர். எனவே, அரச நிறுவனங்களுக்கு அவரது பெயரைவைக்ககூடாது எனக் கூறுவது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.” இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் V. Radhakrishnan தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (05) உiயாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ சௌமியமூர்த்தி தொண்டமான் என்பவர் இந்நாட்டின் ஓர் அடையாளம். தேசியத் தலைவர். அதனால்தான் அவருக்கு […]

இலங்கை செய்தி

இரகசியம் காப்பது குறித்து புதிய கணக்காய்வாளர் நாயகம் சத்தியம்!

  • February 5, 2026
  • 0 Comments

புதிய கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜயரத்ன Ms. Samudika Jayarathna , சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன Jagath Wickramaratne முன்னிலையில் இகரசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டார். 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 9வது பிரிவுக்கு அமைய கணக்காய்வாளர் நாயகம் மற்றும் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக அவர் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டார். இந்நாட்டின் 42வது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது பெண் அதிகாரியாவார். இச்சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற செயலாளர் […]

ஐரோப்பா

05 நாட்களுக்கு மூடப்படும் பரபரப்பான ரயில் நிலையம் – இங்கிலாந்து பயணிகளின் கவனத்திற்கு!

  • February 5, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் மிகவும் பரபரப்பான லண்டன் லிவர்பூல் ரயில் நிலையம் மார்ச் மாதத்தில் 05 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொறியியல் பணிகளுக்காக குறித்த ரயில் நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி, மார்ச் மாதம் 15, 21, 22, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ரயில் நிலையம் மூடப்படும் என்றும் வார இறுதி நாட்களில் பயணிகள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் ஆங்கிலியா (Greater Anglia), சி2சி (c2c), […]

இலங்கை செய்தி

மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும்

  • February 5, 2026
  • 0 Comments

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “மின் அலகு ஒன்றிற்கான சராசரி உற்பத்திச் செலவு ஏற்கனவே 37 ரூபாவிலிருந்து 29 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. மின் அலகு ஒன்றின் உற்பத்திச் செலவைக் குறைக்காமல் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது. தற்போது அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை […]

உலகம்

முடிவுக்கு வந்த “புதிய START” ஒப்பந்தம் – அதிகரிக்கும் அணுவாயுத போட்டி!

  • February 5, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது, இது ஒரு புதிய ஆயுதப் போட்டியின் அச்சத்தை எழுப்பியுள்ளது. “புதிய START” என்று அழைக்கப்படும் மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம், 2010 இல் கையெழுத்தாகியிருந்த நிலையில் தற்போது காலாவதியாகியுள்ளது. அதேநேரம் புதிய ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. இது அணுவாயுத உற்பத்தி மற்றும் உலகளாவிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres), அதன் முடிவு […]

அரசியல் இலங்கை செய்தி

சுதந்திர தினத்தன்று வடக்கில் கரிநாள்: மஹிந்த அணி போர்க்கொடி!

  • February 5, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த Indika Anuruddha இவ்வாறு அதிருப்தி வெளியிட்டார். “ ஷிரந்தி ராஜபக்சவை எப்.சி.ஐடிக்கும் FCID , நாமல் ராஜபக்சவை சி.ஐ.டிக்கும் CID ஒரே நாளில் – ஒரே நேரத்தில் அழைக்கின்றனர். ராஜபக்சக்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் வேட்டையின் […]

இலங்கை செய்தி

நாளுக்கு நாள் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் -ஒரே நாளில் இரு தடவைகள் விலை உயர்வு

  • February 5, 2026
  • 0 Comments

உலக சந்தையில் நிலவும் மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் இன்று (05) தங்கத்தின் விலையில் இரு தடவைகள் மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி, ஒரு பவுண் தங்கம் 5,000 ரூபாவால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,   ஒரு பவுண் 24 கரட் தங்கம் 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் […]

error: Content is protected !!