அரசியல் இலங்கை செய்தி

ஆட்சியை தக்க வைக்க சூழ்ச்சி: டில்வின் சில்வா மறுப்பு!

  • February 7, 2026
  • 0 Comments

“சூழ்ச்சிமூலம் ஆட்சியை தக்கவைக்கும் எவ்வித நோக்கமும் எமக்கு கிடையாது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம்.” என்று ஜே.வி.பியின் JVP செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva தெரிவித்தார். அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் ஆட்சியைப் பொறுப்பேற்போம். அதனை செய்வதற்கு காலம் எடுக்கும். அதற்குரிய அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது. நாட்டில் ஸ்தீரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் ஆசியுடன் ஆட்சியை தொடரவே விரும்புகின்றோம். மாறாக மக்கள் விருப்பமின்றி – […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் மசூதியில் தற்கொலை குண்டு வெடிப்பு – 31 பேர் பலி

  • February 6, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று ஜும்மா தொழுகை நடைபெறும்போது, ஒரு  மசூதியில் ஏற்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் சுமார் 31 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 169 பேர் காயமடைந்துள்ளனர். தர்லாய் பகுதியில் உள்ள கதீஜாதுல் குப்ரா மசூதியின் நுழைவாயில் அருகே குண்டுதாரி வெடிவிபத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். வெடிப்புக்கு முன் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு, […]

விளையாட்டு

இளையோர் உலகக் கோப்பையை வென்றது இந்தியா

  • February 6, 2026
  • 0 Comments

இந்தியா 6 வது முறையாக இளையோர் உலகக் கிண்ண செம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 19 வயதிற்குட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்றது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தால் இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ஓட்டங்களை குவித்தது. சூர்யவன்ஷி 80 பந்தில் 15 […]

ஐரோப்பா செய்தி

கடந்த 24 மணிநேரத்தில் 720 துருப்புக்களை இழந்த ரஷ்யா : உக்ரைனுக்கு பெருகும் ஆதரவு!

  • February 6, 2026
  • 0 Comments

ரஷ்யா கடந்த 24 மணி நேரத்தில் 720 துருப்புக்களை இழந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2022 இல் போர் தொடங்கியதிலிருந்து மொஸ்கோவில் மொத்தம் 1,244,560 துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே போரில் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக உக்ரைனுக்கு கனடா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இராணுவ உதவிகளை வழங்கியுள்ளன. பின்லாந்து உக்ரைனுக்கு €43 மில்லியன் இராணுவ உதவித் தொகுப்பை அறிவித்துள்ளது. உக்ரைன் ஆதரவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் […]

இந்தியா செய்தி

அமெரிக்கா உடனான இந்திய வர்த்தக ஒப்பந்தம் புதிய அத்தியாயம்

  • February 6, 2026
  • 0 Comments

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்கத் தலைநகரில் நடைபெற்ற அரிய வகை கனிமங்கள் தொடர்பான 50 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மாநாட்டின் இடையே அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், வெளியுறவு அமைச்சர் மார்கோ […]

உலகம்

நல்ல ஒரு தொடக்கத்தை அமைத்த பேச்சுவார்த்தை – நம்பிக்கையில் ஈரான்!

  • February 6, 2026
  • 0 Comments

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இன்று ஓமானில் நடைபெற்ற உயர்மட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகள் ஒரு நல்ல தொடக்கத்தை குறிப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும்  ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ( Abbas Araqchi) கூறினார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இது பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு நல்ல தொடக்கமாகும். பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது குறித்து ஒரு புரிதல் உள்ளது. எவ்வாறு தொடர வேண்டும் என்பது குறித்த ஒருங்கிணைப்பு தலைநகரங்களில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார். அணுசக்தி […]

செய்தி

வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் யாழில் கைது!

  • February 6, 2026
  • 0 Comments

யாழ். வேலணை – புங்குடுதீவு வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை கும்பலை சேர்ந்தவரின் அச்சுறுத்தல் அதிகரித்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பலதரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு […]

ஐரோப்பா

புகலிடக் கோரிக்கையாளர்கள் விவகாரம் – 03 ஆப்பிரிக்க நாடுகளை எச்சரித்த பிரித்தானியா!

  • February 6, 2026
  • 0 Comments

நமீபியா, அங்கோலா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு மீது விசா தடைகளை விதிக்கப்போவதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறித்த நாடுகள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஏற்க மறுத்திருந்த நிலையில் மேற்படி அச்சுறுத்தலை  விடுத்துள்ளார். இதனையடுத்து குறித்த நாடுகள் புலம்பெயர்ந்தோரை ஏற்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய குற்றவாளிகள், புகலிடம் கோரத் தவறியவர்கள்  மற்றும் விசா காலாவதியாகி தங்கியிருப்பவர்களைத்  திரும்பப் பெறுவதில் இங்கிலாந்துடன் ஒத்துழைக்க மேற்படி மூன்று ஆப்பிரிக்க நாடுகளும் இப்போது ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் காரணமாக […]

இலங்கை செய்தி

இலங்கைக்கான உதவி தொடரும்: வெளிவிவகார அமைச்சர் உறுதி!

  • February 6, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை இன்று (06) சந்தித்து கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது பேச்சு நடத்தப்பட்டுள்ளது. டித்வா புயலின்போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு டில்வின் சில்வா நன்றி தெரிவித்தார். இலங்கைக்கான தமது நாட்டு ஆதரவை இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தினார். இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியாவின் உதவிகள் தொடரும் எனவும் உறுதியளித்துள்ளார்.

இலங்கை செய்தி

அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு – சபை ஒப்புதல்

  • February 6, 2026
  • 0 Comments

பொது அவசரகால நிலை பிரகடனம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பான தீர்மானம் 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் மாத்திரமே அளிக்கப்பட்டன. இதற்காகப் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார். அதன்படி, குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவர் மாத்திரம் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

error: Content is protected !!