uber-8-5-million-payout-lawsuit-arizona-tamil-news அல்லது uber-ordered-to-pay-8-million-rape-case-verdict அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

உபெர்க்கு அபராதம்: பயணிக்கு ரூ. 71 கோடி (LKR 240 கோடி) இழப்பீடு!

  • February 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் அரிசோனா மாநில நீதிமன்றம், உபெர் (Uber) நிறுவனம் தனது பயணி ஒருவருக்கு $8.5 மில்லியன் (சுமார் ₹71 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அரிசோனாவில் விமானப் பணிப்பெண் (Flight Attendant) பயிற்சிக்கான பட்டமளிப்பு விழாவை முடித்துவிட்டு, ஜெயிலின் டீன் (Jaylynn Dean) என்ற 19 வயது இளம்பெண் தனது விடுதிக்குச் செல்ல உபெர் கார் முன்பதிவு செய்துள்ளார். பயணத்தின் இடையே, ஓட்டுநர் ஹசன் துரே (Hassan […]

இலங்கை செய்தி

“படையினரை அவமதித்த தரப்பே தற்போது அபிமானம் பற்றி கதைக்கிறது”

  • February 7, 2026
  • 0 Comments

“படையினரை மணல் மூட்டை அடுக்குவதற்கு அன்று பயன்படுத்தியவர்களே, இன்று படையினருக்குரிய அபிமானம் பற்றி கதைக்கின்றனர்.” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர Aruna Jayasekara தெரிவித்தார். சுதந்திர தின அணிவகுப்பின்போது போரை முடிப்பதற்கு படையினர் வழங்கிய பங்களிப்பு பற்றி பேசப்படவில்லை என மஹிந்த அணி குற்றஞ்சாட்டிவருகின்றது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறியவை வருமாறு, “ முப்படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் அபிமானம் என்னவென்பது எமக்கு தெரியும். அதனை நாம் பாதுகாப்போம். […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

எப்ஸ்டீன் விவகாரம் – ஸ்டார்மர் நேர்மையான மனிதர் என முன்னாள் பிரதமர் புகழாரம்

  • February 7, 2026
  • 0 Comments

பிரதமரும் தொழிற்கட்சி தலைவருமான சர் கெய்ர் ஸ்டார்மர் தற்போது எதிர்கொள்ளும் அரசியல் சூழல், மிகவும் தீவிரமானது என பிபிசி ரேடியோ 4 இன் இன்றைய நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் (Gordon Brown) அறிவித்துள்ளார். பீட்டர் மண்டேல்சன் தொடர்பான சர்ச்சையில், சரியான நடவடிக்கைகளை எடுக்க ஸ்டார்மர் தாமதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேர்மையான மனிதர் என ஆதரித்து, மண்டேல்சனால் அவர் ஏமாற்றப்பட்டவர் என்றும் கூறியுள்ளார். மேலும், அரசியல் அமைப்பில் ஏற்பட்டுள்ள ஊழல் […]

விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி – ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தியது

  • February 7, 2026
  • 0 Comments

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (07) நடைப்பெற்ற 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் 2 ஆவது லீக் ஆட்டத்தில், ஸ்கொட்லாந்து அணியை 35 ஓட்டங்களால் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் பிரண்டன் கிங் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். […]

உலகம் செய்தி

சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியுள்ளது – பலஸ்தீன முன்னணி தலைவர் ஆதங்கம்

  • February 7, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறியுள்ளதாக தெரிவித்த பலஸ்தீன தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முஸ்தபா பர்கோதி (Mustafa Barghouti) உலகம் இதனை கண்டுள்ளது என்றும் கூறியுள்ளார். கட்டார் தலைநகர் தோஹாவில் இன்று 17 ஆவது அல் ஜசீரா மன்றம் ஆரம்பமான நிலையில் இம்மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “காசாவில் போர் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. இஸ்ரேல்ஏற்கனவே 1,500 க்கும் மேற்பட்ட முறைகள் சட்டத்தை […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

விருந்தினர்களுக்கு தனது விடுமுறை இல்லத்தை பரிந்துரைந்த மண்டேல்சன் – அடுத்தடுத்து வெளியாகும் மர்மங்கள்

  • February 7, 2026
  • 0 Comments

ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சுற்றிய சர்ச்சைகள் அவர் உயிரிழந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரும் புதிய திருப்பங்களை எடுத்து வருகின்றன. காலம் கடந்தும் வெளியாகும் அமெரிக்க நீதித்துறை ஆவணங்கள், அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் அரசியல் முக்கியஸ்தர்கள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்புகின்றன. அந்த வரிசையில், முன்னாள் தொழிற்கட்சி அமைச்சர் லோர்ட் பீட்டர் மண்டேல்சனின் பெயரும் தற்போது விவாதத்திற்குள் வந்துள்ளது. பிரித்தானியாவின் முன்னாள் தொழிற்கட்சி அமைச்சர் லோர்ட் பீட்டர் மண்டேல்சன், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு, விருந்தினர்களை வரவேற்க […]

இலங்கை செய்தி

தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு

  • February 7, 2026
  • 0 Comments

தங்கத்தின் விலை இன்று (07) 2000 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 392,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 362,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

எப்ஸ்டீனுடனான பிரத்தானிய அரச குடும்ப தொடர்புகள் வெளிச்சத்திற்கு – மீண்டும் சர்வதேச அளவில் பேசுபொருளானது

  • February 7, 2026
  • 0 Comments

ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சுற்றிய சர்ச்சைகள் அவர் உயிரிழந்த பின்னரும் ஓய்வதுபோல் தெரியவில்லை. காலம் கடந்தும் வெளியாவதாய் இருக்கும் புதிய ஆவணங்கள், அவர் அரச குடும்ப வட்டாரத்துடன் தொடர்பில் இருந்தாரா என்ற கேள்விகளை மீண்டும் எழுப்புகின்றன. பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஜெஃப்ரி எப்ஸ்டீன், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் அலுவலகத்தை தொடர்புகொண்டு, தனது நண்பரான ஒரு பெண்ணுடன் இரவு உணவு ஏற்பாடு செய்ய முயன்றதாக புதிதாக வெளியான மின்னஞ்சல்கள் காட்டுகின்றன. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அனுப்பப்பட்ட இந்த […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் தொடர்ச்சியாக பலத்த மழை – நூற்றுக்கணக்கான வெள்ள அபாய எச்சரிக்கைகள்

  • February 7, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பல 82 பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் நிறுவனம் (EA) வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் 253 வெள்ள அபாய எச்சரிக்கைகள் அமலில் உள்ளன. வானிலை முன்னறிவிப்பின்படி, சனிக்கிழமை நாட்டின் பெரும்பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென்மேற்கு பகுதிகளிலும் தெற்கு வேல்ஸிலும் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை சிறிதளவு மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த […]

இலங்கை செய்தி

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் 260 மில்லியன் டொலர் வருமானம்

  • February 7, 2026
  • 0 Comments

நாட்டின் இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்ததாக இலவங்கப்பட்டை அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை அடைவதற்குத் தமது நிறுவனம் எதிர்பார்ப்பதாக அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலவங்கப்பட்டை தயாரிப்புகளுள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது ‘இலவங்கப்பட்டை சுருள்கள்’ ஆகும். இதன் மூலம் மாத்திரம் 251 மில்லியன் […]

error: Content is protected !!