உலகம்

சீனா இரகசியமாக அணுவாயுத சோதனை செய்ததா? – குற்றஞ்சாட்டும் அமெரிக்கா!

  • February 10, 2026
  • 0 Comments

சீனா  இரகசிய அணுவாயுத சோதனையை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை  ஜெனீவாவில் நடந்த ஐ.நா. ஆயுதக் குறைப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் துணைச் செயலாளர் தாமஸ் டினானோ (Thomas DiNanno) சீனா அணுவாயுத சோதனைகளுக்கு தயாராகி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், “அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் அப்பட்டமான பொய்கள். அணுசக்தி […]

விளையாட்டு

பாகிஸ்தான்,அமெரிக்கா இன்று பலப்பரீட்சை!

  • February 10, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண தொடரில் இன்றும் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. 10ஆவ லீக் ஆட்டத்தில் நமீபியா Namibia மற்றும் நெதர்லாந்து Netherland அணிகள் மோதுகின்றன. இந்தியாவில் நடைபெறும் இப்போட்டி அந்நாட்டு நேரப்படி முற்பகல் 11 AM மணிக்கு ஆரம்பமாகின்றது. 11 ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து New Zealand , ஐக்கிய அரசு அமீரக United Arab Emirates அணிகள் களம் காண்கின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 PM மணிக்கு இப்போட்டி […]

உலகம்

கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் கப்பல் ஒன்றை முற்றுகையிட்ட அமெரிக்கா!

  • February 10, 2026
  • 0 Comments

கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் போதைப் பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் நேற்று அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. அத்துடன் மேற்படி தாக்குதலை தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களில்  கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. வெனிசுலாவுக்கு அழுத்தம் கொடுக்கும் “எண்ணெய் தனிமைப்படுத்தல்” உத்தியின் ஒரு பகுதியாக குறித்த கப்பல்கள் முற்றுகையிடப்பட்டதாக பாதுகாப்புச் […]

உலகம்

சிட்னி கைது நடவடிக்கையை நியாயப்படுத்தும் பொலிஸார்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கொதிப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog இன் ஆஸ்திரேலிய பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் நடைபெற்ற போராட்டத்தின்போது 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. பொலிஸாரை தாக்க முற்பட்டனர் என இவர்களில் 10 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சிட்னியில் சுமார் 6 ஆயிரம்பேர்வரை நேற்றிரவு திரண்டிருந்தனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்ப்புக் கூட்டத்தில் உரைகள் முடிவடைந்த பின்னர், போராட்டக்காரர்கள், நியூ சவுத் வேல்ஸ் மாநிலய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். […]

விளையாட்டு

1996 இல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செய்த செயலை சுட்டிக்காட்டி அநுர நன்றி தெரிவிப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி திட்டமிட்ட அடிப்படையில் நடப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake தெரிவித்தார். போட்டி நடைபெறுவதை உறுதிப்படுத்தியதற்காக பாகிஸ்தான் பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐ.சி.சி. முன்னெடுத்த முயற்சிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராட்டு தெரிவித்துள்ளார். 1996 உலகக் கோப்பையின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஏனைய அணிகள் கொழும்பில் விளையாடாத நேரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கைக்காக காட்டிய ஒற்றுமையை ஒருபோதும் மறக்கமாட்டோம் […]

விளையாட்டு

பாகிஸ்தான் ‘பல்டி’ – இந்தியாவுடன் மோத முடிவு!

  • February 10, 2026
  • 0 Comments

T -20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் தொடர்பில் தான் எடுத்திருந்த முடிவை பாகிஸ்தான் Pakistan மாற்றியுள்ளது. இதற்கமைய இந்தியாவுடன் இலங்கை ஆடுகளத்தில் விளையாட அந்நாடு சம்மதம் தெரிவித்துள்ளது. T – 20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டி புறக்கணிக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்திருந்தது. எனினும், இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைPakistan Cricket Board , ICC க்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது.இருந்தது. போட்டியை புறக்கணித்தால் கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படும் என […]

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை இழந்ததற்கான மற்றொரு அறிகுறி – கன்சர்வேடிவ் விசனம்

  • February 9, 2026
  • 0 Comments

டவுனிங் ஸ்ட்ரீட் தகவல் தொடர்பு பணிப்பாளர் டிம் ஆலன் (Tim Allan)  திடீரென பதவி விலகியுள்ள நிலையில் பிரதமர் ஸ்டார்மர் தனது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை இழந்ததற்கான மற்றொரு அறிகுறியென  கன்சர்வேடிவ் தலைவர் கெமி படேனோக் (Kemi Badenoch) விமர்சித்துள்ளார். மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பிலான வெளிப்பாடுகள் பிரித்தானியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் ஸ்டார்மரின் மிக நெருக்கமான அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் […]

இலங்கை செய்தி

கெஹலியவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • February 9, 2026
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, குறித்த வழக்கின் மேலதிக விசாரணையை மார்ச் மாதம் 14 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் […]

இலங்கை

டிட்வா – இலங்கை பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக ஐ.நா தகவல்

  • February 9, 2026
  • 0 Comments

டிட்வா புயல் காரணமாக நாடு தற்போது பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக சேதங்கள் குறித்து வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, கடந்த வருடம் டிசம்பர் மாத்தில் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரியது. இதன் மூலம், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 06 இலட்சத்து 58 ஆயிரம் பேருக்கு உதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை, இந்த திட்டத்தின் கீழ் […]

இலங்கை செய்தி

பாடசாலை போக்குவரத்து சேவையை மேலும் திறமையாக பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம்

  • February 9, 2026
  • 0 Comments

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் “சிசு சரிய” பாடசாலை போக்குவரத்து சேவையை மேலும் திறமையாக பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள வரைவு விதிமுறைகள் குறித்தும், அதில் சேர்க்கப்பட வேண்டிய புதிய […]

error: Content is protected !!