ஐரோப்பா

கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகத்திற்கு அருகே மனித புதைக்குழி கண்டுப்பிடிப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழக மாணவர்கள்  அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, வைக்கிங் சகாப்தத்தில் புதைக்கப்பட்ட  கூட்டு புதைக்குழியை  கண்டுப்பிடித்துள்ளனர். அதில் குறைந்தது 10 நபர்களின் துண்டு துண்டான எச்சங்கள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. 17 முதல் 24 வயதுக்குட்பட்ட “மிகவும் உயரமான” மனிதரின் என்புக்கூடும் இதன்போது இனங்காணப்பட்டுள்ளது.  அவரது சாரசரி உயரம் 6 அடி 5 அங்குலம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உயரமான நபரின் மண்டை ஓட்டில்  மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது ஹார்மோன் தொடர்பான வளர்ச்சி […]

இந்தியா தமிழ்நாடு

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு நிறைவுக்கு

  • February 10, 2026
  • 0 Comments

தூய்மை பணியாளர் பிரச்னையில் உழைப்போர் உரிமை இயக்கத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மனு […]

இலங்கை செய்தி

பிக்குகளை விடுவிக்கக் கோரி திருமலையில் ஆர்ப்பாட்டம்!

  • February 10, 2026
  • 0 Comments

திருகோணமலை, சங்கமித்தை விகாரைக்கு முன்பாக இன்று காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக் கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. திருகோணமலை ‘டச்பே’ கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டுமானம் ஒன்றை அமைத்தமை மற்றும் அங்கு புத்தர் சிலையொன்றை நிறுவியமை தொடர்பாக கடந்த மாதம் 14 ஆம் திகதி மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பௌத்த பிக்குகள் மற்றும் 6 பொதுமக்கள் […]

ஆஸ்திரேலியா

இஸ்ரேல் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் வெடித்த போராட்டம் தீவிரம்

  • February 10, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் வருகைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையுடன் நிறைவடைந்துள்ளன. திங்கட்கிழமை இரவு நடந்த பேரணியில், போராட்டக்காரர்கள் மற்றும் அவுஸ்திரேலிய பொலிஸார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்அதிகாரிகள் அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்தார்கள் என நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் ஆணையர் மால் லான்யோன் தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை சிட்னி பொலிஸ் நிலையம் முன்பாக மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டக்கார்கள் மீதான குற்றச்சாட்டுகள் […]

இலங்கை

இந்தியா – பாகிஸ்தான் கிரிகெட் போட்டி : நிபா வைரஸ் அச்சம் குறித்து அமைச்சர் விளக்கம்!

  • February 10, 2026
  • 0 Comments

உலகெங்கிலும் பல நாடுகளுக்கு பரவியுள்ள நிபா வைரஸ் குறித்து நாட்டின் சுகாதாரத் துறை சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், விமான நிலையப் பகுதியில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறினார். […]

இலங்கை செய்தி

குஜராத் முதல்வருடன் ஜே.வி.பி. செயலர் சந்திப்பு: கேரளா செல்லவும் ஏற்பாடு!

  • February 10, 2026
  • 0 Comments

ஜே.வி.பியின் JVP பொதுச்செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva, இந்தியா குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர ரஜினிகாந்த் படேலுடன் Bhupendra Rajnikant Patel பேச்சு நடத்தியுள்ளார். இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது என ஜே.வி.பியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் (ICCR) அழைப்பின் பிரகாரமே டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ளார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ் Kitnan Selvaraj , இளங்குரமன் Ilanguraman உள்ளிட்ட குழுவினரும் சென்றுள்ளனர். இவ்விஜயத்தின் ஓர் அங்கமாகவே குஜராத் […]

உலகம்

கனடாவையும் – அமெரிக்காவையும் இணைக்கும் பாலத்தை திறக்க விடமாட்டேன் : ட்ரம்ப் அச்சுறுத்தல்!

  • February 10, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் புதிய பாலம் திறக்கும் நடவடிக்கையை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். கனடாவின் ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தையும் அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தையும் இணைக்கும் புதிய பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாலத்தில் குறைந்தபட்சம் பாதியையாவது சொந்தமாக்கிக் கொள்ளும் முனைப்பில் அமெரிக்கா செயற்பட்டு வருகிறது.  இதற்கமைய ட்ரம்ப் மேற்படி அச்சுறுத்தலை விடுத்துள்ளார். 4.7 பில்லியன் பொருட் செலவில் நிர்மாணிக்கப்படும் குறித்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2018 ஆம் […]

உலகம்

ஊழல் மிகக் குறைந்த ஆசிய நாடாக சிங்கப்பூர் தெரிவு : முதலிடம் எந்த நாட்டிற்கு தெரியுமா?

  • February 10, 2026
  • 0 Comments

உலக நாடுகளில் ஊழல் மிகக் குறைந்த ஆசிய நாடாக சிங்கப்பூர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் எதிர்ப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் (anti-corruption body Transparency International’)  ஊழல் உணர்வுகள் குறியீடு 2025 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட  கணக்கெடுப்பின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறியீடு முதன்முதலில் 1995  ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதிலிருந்து முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே ஆசிய நாடாக சிங்கப்பூர் உள்ளது. முன்னதாக 2022 மற்றும் 2023  ஆம் ஆண்டுகளில் 05 ஆவது […]

விளையாட்டு

நமீபியாவை பந்தாடியது நெதர்லாந்து!

  • February 10, 2026
  • 0 Comments

நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, ஏழு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. T – 20 உலகக் கிண்ண தொடரில் 10வது போட்டியில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் நெதர்லாந்து அணி 157 ஓட்டங்களை இலக்காக […]

இலங்கை செய்தி

மாணவர்களிடம் நிதி சேகரிக்க தடை: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு!

  • February 10, 2026
  • 0 Comments

“பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதி சேகரிக்கக் கூடாது என இறுக்கமான சுற்றறிக்கை உள்ளது. எனினும், பெற்றோர் அல்லது பழைய மாணவர் சங்கங்களின் பெயரில் மறைமுகமாக நிதி அறவிடப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் Vedhanayakan தெரிவித்தார். இத்தகைய முறைகேடான நிதி அறவீடுகளைக் கண்காணித்துத் தடுத்து நிறுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் எனவும் அவர் கூறினார். வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், […]

error: Content is protected !!