ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – பிரெஞ்சு ஜனாதிபதி அழைப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

ஐரோப்பா உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். சீனா, ரஷ்யா மற்றும் இப்போது அமெரிக்காவிலிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்ரோன் மேற்படி அழைப்பு விடுத்துள்ளார். “எதிர்கால செலவினங்களுக்கு நிதியளிக்க பகிரப்பட்ட கடன் திறனைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.  எதிர்காலத்திற்கான யூரோபத்திரங்கள். சிறந்த திட்டங்களுக்கு நிதியளிக்க நமக்கு பெரிய ஐரோப்பிய திட்டங்கள் தேவை,” என்றும் அவர் கூறினார். மக்ரோனின் கூற்றுப்படி, 27 உறுப்பினர்களைக் கொண்ட […]

இலங்கை செய்தி

இ.போ.ச பெண் நடத்துனர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்

  • February 10, 2026
  • 0 Comments

இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) நியமிக்கப்பட்ட முதல் பெண் நடத்துனர்கள் இன்று (10) கடமைகளைப் பொறுப்பேற்றனர். புறக்கோட்டையில் இருந்து பெண் நடத்துனர்கள் தங்கள் கடமைகளை ஆரம்பித்தனர். அவர்கள் அரசுப் பேருந்துகளில் நடத்துனர்களாக அதிகாரப்பூர்வமாக தங்கள் பணிகளை இன்று தொடங்கினர். அண்மையில் மொத்தம் 19 பெண்கள் இலங்கை போக்குவரத்து சபை நடத்துனர்களாக நியமிக்கப்பட்டனர். நாட்டின் பேருந்து சேவை வரலாற்றில் பெண் நடத்துனர்கள் நியமிக்கப்பட்டமை இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.

இலங்கை செய்தி

யாழில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு – உடற்கூற்று ஆய்வில் சிறுவன் உயிரழப்புக்கான காரணம் வெளியானது

  • February 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்று ஆய்வில் துப்பாக்கி தோட்டா நெற்றியில் பட்டு , தலைக்குள் ஊடுருவி மூளையை துளைத்து சென்றமையால் மரணம் சம்பவத்துள்ளது என தெரியவந்துள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் , வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான். சிறுவனது உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் […]

இலங்கை

அரசு நிறுவனங்களில் உள்ள உயர் பதவிகளில் மாற்றம்!

  • February 10, 2026
  • 0 Comments

அரசு நிறுவனங்களில் உள்ள உயர் பதவிகளை மாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று  இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நியமனங்கள் குறித்த விவாதங்கள் ஏற்கனவே நடந்து வருவதாகவும், இந்த மறுசீரமைப்பில் பல்வேறு அரசு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள்,  குழுத் தலைவர்கள்  மாற்றப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செய்தி

சந்தேக நபர் கைது: போலி துப்பாக்கியே கொண்டுவந்தார் என்பது அம்பலம்!

  • February 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கொண்டு வந்த துப்பாக்கி போலி துப்பாக்கி எனவும் , குறித்த நபரை தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள மருதனார்மடம் சந்தைக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது குறித்த நபர் தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் வந்து, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு […]

இலங்கை செய்தி

யாழில் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தைக்குள் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- மருதனார்மடம் சந்தைக்கு வந்த நபர் ஒருவர், தனது அடையாளத்தை மறைக்கும் வகையில் தலைக்கவசம் மற்றும் கைகளுக்குக் கையுறைகளை அணிந்திருந்துள்ளார். அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் வழமை போல் பச்சை மிளகாயைக் கொள்வனவு செய்த அவர், திடீரென “இந்தச் சந்தைக்குள் வட்டிக்குப் […]

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மரை ஆதரித்து அறிக்கை வெளியிட்ட வேல்ஸ் முதலமைச்சர்

  • February 10, 2026
  • 0 Comments

பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை [Keir Starmer] ஆதரிப்பதாக வேல்ஸ் முதல் அமைச்சர் எலுனெட் மோர்கன் [Eluned Morgan] தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் தலைமையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வேல்ஸின் நலனை மையமாக கொண்டு இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, வேல்ஸில் நிலைத்தன்மை, பொருளாதாரம், உட்கட்டமைப்பு முதலீடு மற்றும் மக்கள் நலனுக்கான தொடர்ச்சியான நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் தலைமை என்பது தரநிலைகளை நிலைநிறுத்தி, உடனடியாக […]

ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயில் விபத்தில் சிக்கிய படகு – 66 பேர் மீட்பு!

  • February 10, 2026
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயில் விபத்தில் சிக்கிய படகில் இருந்து 66 நபர்களை பிரெஞ்சு அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டனர். பாஸ்-டி-கலைஸ் (Pas-de-Calais)  கடற்கரையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவ நடவடிக்கைக்காக கலைஸ் (Calais) துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆங்கிலக் கால்வாயில்  ஆபத்தான பயணங்களை தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளபோதிலும் பிரித்தானியாவை அடையும் நோக்கில் பலர் இவ்வாறான பயணங்களை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு 1,208 பேர் இந்த கால்வாயை வெற்றிகரமாக கடந்து பிரித்தானியாவை அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

NPP அரசின் வேலைத்திட்டத்துக்கு போரா சமூகம் பாராட்டு!

  • February 10, 2026
  • 0 Comments

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப்புக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான போரா சமூக உறுப்பினர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் , இலங்கையின் […]

உலகம் செய்தி

ட்ரம்ப் தலைமையில் எப்ஸ்டீன் கோப்புகள் திருத்தப்பட்டுள்ளது – வெளியான பரபரப்பு தகவல்

  • February 10, 2026
  • 0 Comments

மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் [Jeffrey Epstein] தொடர்பான கோப்புகள் நீதித்துறை வெளியிடுவதற்கு முன்பே முறையற்ற விதத்தில் திருத்தப்பட்டதாக அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். கடந்த டிசம்பர் மாதம், சுமார் மூன்று மில்லியன் பக்க ஆவணங்கள் வெளிப்படைத்தன்மை சட்டம் (EFTA) கீழ் வெளியிடப்பட்ட நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்றை தினம் அந்த ஆவணங்களை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த ஆவணங்கள் டொனால்ட் டிரம்ப் தலைமையிலிருந்த போது புலனாய்வு பிரிவால் (FBI) திருத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக பிரதிநிதி […]

error: Content is protected !!