இலங்கை செய்தி

மாறியது வரலாறு: தோட்டத் தொழிலாளர்களை நேரில் சென்று சந்தித்தார் ஜனாதிபதி!

  • February 11, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலையக பெருந்தோட்டப் பகுதிக்குச் சென்று, தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது. தமக்குரிய சம்பள உயர்வு நேற்று கிடைக்கப்பெற்றதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையிலேயே அவர்களை ஜனாதிபதி இன்று நேரில் சந்தித்தார். முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நுவரெலியா சென்றார். அங்கு செல்லும் வழியிலேயே தொழிலாளர்களைச் சந்தித்து, […]

உலகம்

மடகஸ்காரில் கரையை கடந்த கெசானி புயல் – 09 பேர் பலி!

  • February 11, 2026
  • 0 Comments

மடகஸ்காரில் கெசானி (Gezani ) புயல் நள்ளிரவில் கரையைக் கடந்துள்ள நிலையில், 09 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு துறைமுக நகரமான டோமாசினாவில் (Toamasina) உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஒன்பது பேர் இறந்ததாகவும், சுமார் 19 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 195 கிமீ (121 மைல்) வேகத்தில் காற்று வீசியதுடன், பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாட்டின் வடகிழக்கில் உள்ள […]

ஐரோப்பா

லண்டனில் பாடசாலையொன்றில் கத்தி குத்து தாக்குதல் – இரு சிறார்கள் ஆபத்தான நிலையில்!

  • February 11, 2026
  • 0 Comments

வடமேற்கு லண்டனில் உள்ள பாடசாலையொன்றில் இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டன் நேரப்படி நேற்று மதியம் கிங்ஸ்பரி உயர்நிலைப் பாடசாலையில் குறித்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றது. இதில் 13 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் தாக்கப்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. “சுற்றுப்புற சூழ்நிலைகள்” காரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு […]

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம்: ஐரோப்பிய குழுவிடம் தமிழரசுக் கட்சி கோரிக்கை!

  • February 11, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களுடன், ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் பல தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே தமிழரசுக் கட்சியினருடன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். “ பயங்கரவாத தடைச் சட்டம் நீக்குதல் மற்றும் புது வரைபு, மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட வேறு பல விடயங்களை இதன்போது […]

விளையாட்டு

இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வைத்தியசாலையில் அனுமதி!

  • February 11, 2026
  • 0 Comments

இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா (Abhishek Sharma) வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இதனால்  நமீபியாவுக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது போட்டியில் அவர் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது. வயிற்று தொற்று காரணமாக அபிஷேக் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பிரச்சனையைக் கண்டறிய சில சோதனைகள் செய்யப்படுகின்றன. இன்று […]

இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் அடித்துக் கொலை: 12 பேருக்கு மரண தண்டனை!

  • February 11, 2026
  • 0 Comments

அரகலய என்றழைக்கப்படும் மக்கள் போராட்டத்தின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி Amarakeerthi Athukorala கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கே கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மேற்படி தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் 41 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனினும், 37 பேர்தான் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்கள். மூவரடங்கிய நீதிபதிகள் குழாமில் இருவர் […]

இலங்கை செய்தி

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்!

  • February 11, 2026
  • 0 Comments

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் பிரதிநிதிகள் European External Action Service , பிரதமர் பிரதமர் கலாநிதி ஹரிணி Dr. Harini Amarasooriya அமரசூரியவை சந்தித்து பேச்சு நடத்தினர். பிரதமர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது. இலங்கையின் முக்கிய அபிவிருத்தி மற்றும் பொருளாதாரப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் விளங்குவதாக இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார். இருதரப்புக்கும் இடையிலான நீண்டகாலப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்துவத்தை […]

ஐரோப்பா

நோர்வேயில் கூடுதல் துருப்புக்களை நிலைநிறுத்தும் பிரித்தானியா!

  • February 11, 2026
  • 0 Comments

நோர்வேயில் தனது துருப்புக்களின் எண்ணிக்கையை 1,000 இருந்து 2,000 ஆக அதிகரிக்க பிரித்தானியா உத்தேசித்துள்ளது. பனிப்போருக்குப் பிறகு ஆர்க்டிக் மற்றும் உயர் வடக்கின் பாதுகாப்புக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி ( John Healey) கூறியதை தொடர்ந்து துருப்புக்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வரும் மார்ச் மாதத்தில், ஆர்க்டிக் சென்ட்ரி பயிற்சியில் இங்கிலாந்து பங்கேற்கும் என்றும், இதற்காக 1500 துருப்புகள் அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில், […]

உலகம்

அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் வந்த எச்சரிக்கை – ஈரான் அடிப்பணிய வேண்டும் என மிரட்டல்!

  • February 11, 2026
  • 0 Comments

அணுசக்தி செறிவூட்டல் முதல் பாலிஸ்டிக் ஏவுகணைகள் வரையிலான பிரச்சினைகள் குறித்த தனது கோரிக்கைகளுக்கு தெஹ்ரான் இணங்கவில்லை என்றால், இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  ஈரானை எச்சரித்துள்ளார். இஸ்ரேலிய ஊடகமான சேனல் 12 வெளியிட்டுள்ள செய்தியில்  ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றால் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து  சூசகமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ட்ரம்ப் நிர்வாகம் மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அந்த செய்தியில் […]

ஐரோப்பா

அல்பேனியாவில் அரச எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் – 16 பேர் காயம், பலர் கைது!

  • February 11, 2026
  • 0 Comments

அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் (Tirana)  உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர். பிரதமர் எடி ராமா (Edi Rama) பதவி விலக வேண்டும் எனக் கோரி மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, அல்பேனியாவின் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகிலும் மோதல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதில் குறைந்தது 16 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், 13 பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும் […]

error: Content is protected !!