கால்நடைகளைக் களவாடி இறைச்சியாக்கும் கும்பல்: கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்!
கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை கைது செய்யுமாறு வலியுறுத்தி யாழ். வேலணையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினரால் இன்று முற்பகல் 10 மணியளவில் வேலணை வங்ககாவடியில் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வங்களாவடி சந்தியில் ஆரம்பமான குறித்த போராட்டம் நடைபவனியாக வேலணை பிரதேச செயலகம்வரை சென்றது. “வறிய பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே” “சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்த பொலிசாருக்கு துணைநிற்போம்” ” வாழ்வாதாரத்தை பறிக்காதே” “ஊர் கூடித் திருட்டை ஒழிப்போம்” உள்ளிட்ட பல்வேறு கோசங்களுடன் […]













