இலங்கை செய்தி

சிரேஷ்ட இடதுசாரி தலைவர் திஸ்ஸ விதாரண காலமானார்!

  • February 13, 2026
  • 0 Comments

இலங்கையின் சிரேஷ்ட இடதுசாரி அரசியல் தலைவர்களுள் ஒருவரான லங்கா சமசமாசக் கட்சியின் Lanka Samasamasha Party தலைவர், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண Tissa Witharana காலமானார். (91 வயது) உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிறி ஜயவர்த்தனபுர கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். பேராசிரியர் திஸ்ஸ விதாரண 2004ஆம் ஆண்டு தொடக்கம், 2015ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினராக அங்கம் வகித்தார். மஹிந்த […]

விளையாட்டு

இந்திய அணி புதிய சாதனை!

  • February 13, 2026
  • 0 Comments

T-20 World Cup – உலகக் கிண்ண வரலாற்றில் அதிவேகமாக 100 ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா India படைத்துள்ளது. நமீபியா Namibia அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 6.5 ஓவர்களில் இந்திய அணி 100 ஓட்டங்களைக் கடந்தது. இதற்கு முன்னர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 7 ஓவர்களில் 100 ஓட்டங்களை குவித்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனை இந்திய அணியால் முறியடிக்கப்பட்டுள்ளது. […]

விளையாட்டு

ICC World Cup: இன்றைய போட்டிகள் விபரம்!

  • February 13, 2026
  • 0 Comments

ICC Men’s T20 உலகக்கிண்ண தொடரில் இன்று (13) மூன்று முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 19 ஆவது லீக் ஆட்டத்தில் Australia மற்றும் Zimbabweஅணிகள் மோதுகின்றன. Colombo (RPS) மைதானத்தில் இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். மாலை 3 மணிக்கு மும்பையில் நடக்கும் 20 ஆவது லீக் Canada , United Arab Emirates அணிகள் மோதுகின்றன. Chennai இல் இரவு 7 மணிக்கு நடைபெறும் 21 ஆவது லீக் ஆட்டத்தில் […]

ஐரோப்பா

நேட்டோவில் இருந்து பின்வாங்கும் அமெரிக்கா : மழுங்கும் செயற்பாடுகள்!

  • February 13, 2026
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு அமைப்பான நேட்டோவின் தலைமைப் பொறுப்பிலிருந்து அமெரிக்கா பின்வாங்கி, ஐரோப்பாவைப் பாதுகாப்பதில் பெரும் பங்களிப்பை செய்ய வேண்டும் என நேட்டோ தலைவர்கள் தெரிவித்துள்ள கூற்றை ஐரோப்பிய தலைவர்கள் நிராகரித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் நேற்று (12.02) நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ( Pete Hegseth) கலந்து கொள்ளவில்லை. அதேபோல் நேட்டோ வெளியுறவு அமைச்சர்களின் கடைசி கூட்டத்தை வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) […]

அரசியல் இலங்கை

சுவிஸ் தூதரக சந்திப்பை குழப்பியது யார்? கஜேந்திரகுமார் விளக்கம்!

  • February 13, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவிருந்த சந்திப்புக்கு தமது கட்சியே இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Gajendrakumar Ponnambalam நிராகரித்துள்ளார். யாழிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை நிராகரித்தார். “தமிழ் தேசியப் பேரவையின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 15ஆம் திகதி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. வடக்கு கிழக்கை மையப்படுத்திய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் […]

ஐரோப்பா

லூவ்ரே அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி : ஒரு தசாப்தத்தில் 10 மில்லியன் கொள்ளை!

  • February 13, 2026
  • 0 Comments

பிரான்ஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 09 பேர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 மில்லியன் யூரோ வரையில் மோசடி செய்யப்பட்டதாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும், வழக்கு விசாரணைகளுக்கு அமைய கடந்த செவ்வாய்க்கிழமை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு லூவ்ரே  ஊழியர்கள், பல சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் […]

உலகம்

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் BNP வெற்றி நடை!

  • February 13, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பி.என்.பி. எனப்படுகின்ற பங்களாதேஷ் தேசியவாத கட்சி Bangladesh Nationalist Party (BNP) வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை தமது கட்சி பெற்றுள்ளது என BNP இன்று அறிவித்தது. இதற்கமைய பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் Tarique Rahman பதவி ஏற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இவர் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷில் கடந்த 2024ம் ஆண்டு மாணவர் புரட்சி வெடித்தது. இதனையடுத்து மக்கள் போராட்டமும் […]

அரசியல் இலங்கை

அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன? பேராளர் மாநாட்டை நடத்துகிறது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி!

  • February 13, 2026
  • 0 Comments

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் Democratic Tamil National Alliance பேராளர் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நிகழ்வுக்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்தே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை விளக்கங்களை முன்வைக்கும் நோக்கில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், […]

ஆஸ்திரேலியா

9 மாதங்களுக்குள்ளேயே தலைமைப் பதவியை இழந்த ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி தலைவர்!

  • February 13, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் Liberal Party புதிய தலைவராக ஆங்கஸ் டெய்லர் Angus Taylor தெரிவு செய்யப்பட்டுள்ளார். இனி அவரே நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், எதிரணி கூட்டணி தலைவராகவும் செயல்படுவார். கட்சியால் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை ஏற்று, கட்சியை வெற்றிபாதை நோக்கி அழைத்து செல்வதற்கு தீவிரமாக செயல்படபோவதாக அவர் உறுதியளித்துள்ளார். தலைமைப் பதவிக்காக கட்சிக்குள் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே Sussan Ley , அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். […]

உலகம் செய்தி

பலஸ்தீனியர்களின் குடியுரிமை இரத்து – இஸ்ரேலின் நடவடிக்கையால் பெரும் சர்ச்சை

  • February 12, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் தாக்குதல்கள் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு பாலஸ்தீனியர்களின் குடியுரிமையை இரத்து செய்யும் அரசின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவின் பேரில், அந்த இருவரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பலஸ்தீன தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது “ஆபத்தான முன்னுதாரணம்”  என்றும், ஆயிரக்கணக்கான கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகளை இலக்குவைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 2023ஆம் ஆண்டு […]

error: Content is protected !!