பிரித்தானியாவில் பல் மருத்துவ சேவையில் பெரும் நெருக்கடி – நோயாளர்கள் பெரும் சிரமம்
பிரித்தானியாவின் பொதுச் சுகாதார அமைப்பின் பல் மருத்துவ சேவையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலைமை மிக மோசமாக காணப்படுவதால், ஏழை நாடுகளில் மருத்துவ சேவைகள் வழங்க உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனமொன்று தற்போது பிரித்தானியாவிற்கே அதிக சேவையை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மில்லியன் கணக்கான மக்கள் பொதுச் சுகாதார அமைப்பின் பல் மருத்துவ சேவைகளை அணுக சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான வருமானம் பெறுவோரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுச் சுகாதார அமைப்பில் பல் […]













