அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தம் : நெதன்யாகு விதித்துள்ள நிபந்தனைகள்!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான எந்தவொரு வருங்கால ஒப்பந்தத்திற்கும் அவசியமானதாகக் கருதும் நிபந்தனைகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோடிட்டு காட்டியுள்ளார். அதில், தெஹ்ரானின் அனைத்து அணுசக்தி உள்கட்டமைப்பையும் அகற்றுவது முக்கியமான ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அமெரிக்காவுடன் இரண்டாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைக்காக சுவிட்சர்லாந்திற்குச் சென்ற நிலையில் இந்த விடயங்களை நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்களுக்கான வருடாந்திர மாநாட்டில் பேசிய நெதன்யாகு, ஒப்பந்தம் குறித்து […]













