நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (ஜுலை 06) காலை 11 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி அம்பகமுவ பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தேவையேற்பட்டால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
மேலும், கடும் மழை மற்றும் காற்று காரமாணக நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் இன்றும் (06), நாளையும் (07) இரு தினங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேலதிக இரண்டு தினங்களுக்கு பாடசாலையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டி.எம்.பி.எல்.அபேரத்ன தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)