உலகம் செய்தி

வங்கதேசத்தில் இந்து ஆசிரியர் ஒருவரின் வீடு தீ வைத்து எரிப்பு

இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வங்கதேசத்தில்(Bangladesh) ஒரு இந்து நபரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சில்ஹெட்(Sylhet) மாவட்டத்தின் கோவைங்காட் உபாசிலாவில்(Govaingot upazila) உள்ள பஹோர்(Pahor) கிராமத்தில் இருக்கும் பிரேந்திர குமார் டே(Birendra Kumar Dey) என்ற ஆசிரியரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, தாக்குதலில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணமும் குற்றவாளிகளின் அடையாளங்களும் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் முகமது யூனுஸின்(Muhammad Yunus) இடைக்கால அரசாங்கத்தின் கண்காணிப்பில் இந்துக்கள் மீதான ஒன்பதாவது சம்பவமாகும்.

இதற்கு முன்னதாக தகன்பூயானில்(Dhakhangbhuyan) 28 வயது இந்து ஆட்டோ ஓட்டுநர் சமீர் தாஸ்(Sameer Das) என்ற நபர் அடித்து கொல்லப்பட்டார்.

தொடர்புடைய செய்தி

வங்கதேசத்தில் 28 வயது இந்து ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!