வங்கதேசத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்து நபர் சிகிச்சை பலனின்றி மரணம்
வங்கதேசத்தில்(Bangladesh) சில நாட்களுக்கு முன்பு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்ட இந்து நபர் டாக்காவில்(Dhaka) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
50 வயதான கோகோன் தாஸ்(Khokon Das) என்று அடையாளம் காணப்பட்ட நபர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கத்தியால் குத்தப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டார். பின்னர் அவர் அருகிலுள்ள குளத்தில் குதித்ததால் உயிர் தப்பினார்.
இந்நிலையில், தாக்குதலுக்கு பிறகு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோகோன் தாஸ் உயிரிழந்துள்ளார்.
வங்கதேசத்தில் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து நடந்த தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் இது நிகழ்கிறது.
கடந்த மாதம், இரண்டு இந்து இளைஞர்கள் தனித்தனி சம்பவங்களில் அடித்துக் கொல்லப்பட்டனர்.
மைமென்சிங்(Mymensingh) மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியரான திபு சந்திர தாஸ்(Dipu Chandra Das), டிசம்பர் 18 அன்று தெய்வ நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் அடித்துக் கொல்லப்பட்டார்.
இதற்கிடையில், ராஜ்பரியின்(Rajbari) பங்ஷா(Bangsha) துணை மாவட்டத்தில் அம்ரித் மொண்டல்(Amrit Mondal) என்ற இந்து இளைஞர் மிரட்டி பணம் பறித்தல் தகராறில் கொல்லப்பட்டார்.
தொடர்புடைய செய்தி





