வங்கதேசத்தில் இந்து பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொலை
வங்கதேசத்தில்(Bangladesh) இந்து நபர்கள் மீதான தாக்குதலுக்கு மத்தியில், செய்தித்தாளின் தற்காலிக ஆசிரியரும் தொழிற்சாலை உரிமையாளருமான 45 வயது நபர் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கதேசத்தில் உள்ள ஜஷோரில்(Jashore) உள்ள மணிராம்பூர்(Manirampur) துணை மாவட்டத்தின் கோபாலியா பஜார்(Gopalia Bazaar) பகுதியில் ராணா பிரதாப் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அருவா(Arua) கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரின் மகன் பிரதாப், இரண்டு ஆண்டுகளாக கோபாலியா பஜாரில் ஒரு ஐஸ் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
சம்பவ தினதன்று சிலர் அவரை ஐஸ் தொழிற்சாலையிலிருந்து வெளியே அழைத்து ஒரு சந்துக்கு அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்நிலையி, ஜஷோரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ராணா பிரதாப் மீது பல வழக்குகள் இருப்பதாகவும் ஒரு தீவிரவாதக் குழுவுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர் நரைல்(Narail) மாவட்டத்தில் இருந்து வெளியாகும் பி.டி. கோபோர்(BD Khobor) என்ற நாளிதழின் தற்காலிக ஆசிரியராகவும் அவர் பணியாற்றி வருகிறார்.





