ஆஸ்திரேலியாவில் நெடுஞ்சாலையில் விபத்து : இரு சிறுமிகள் பலி!
ஆஸ்திரேலியாவின் வீட்பெல்ட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஏழு வயது சிறுமிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த சிறுமிகள் பயணித்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு பிரிவின் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில், அவர்களை மீட்டுள்ளனர்.
வாகனத்தை ஓட்டிச் சென்ற 31 வயது பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் மெரிடின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





