விஜய்க்கு சார்பாக தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் – காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் திருச்சியில் தனது முதலாவது பிரச்சாரத்தை நடத்தியிருந்தது. அதில் த.வெ.க கட்சிக்கு பல்வேறு நெருக்கடிகளை ஆளும் தி.முக. அரசு கொடுத்துவருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிகள் அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
த.வெ.க தலைவர் விஜய் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 3 visits today)