விமான நிலையத்தை இலக்குவைத்து ஹிஸ்புல்லா தாக்குதல்
இஸ்ரேலின் பென்கூறியன் விமான நிலையத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா இராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
எனினும் இதனால் விமான நிலையத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் விமான சேவை வழமை போல் இடம் பெறுவதாகவும் இஸ்ரேலிய விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதி ஒன்றில் இதனால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.





