வைத்தியர் ஷாபி முழுமையாக விடுதலை
வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக குருநாகல் மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிங்கள பெண்களை கருத்தடை செய்த குற்றச்சாட்டில் தொடர்ப்பட்டு இருந்த இவ்வழக்கில் சாட்சிகள் இல்லை என சட்டமா அதிபர் இன்று உறுதிப்படுத்தியதை அடுத்து நீதவான் இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட வழக்கு தீர்ப்பின் போது அவருக்கான தொழில் மற்றும் சம்பள நிலுவைகள் வழங்கப்பட்டன.
எனினும் வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
(Visited 5 times, 1 visits today)