இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடதிய ஹிஸ்புல்லா
ஈரானின் ஆதரவுடன் லெபனானைத் தளமாகக் கொண்டு இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா போராளி அமைப்பு, ஜூலை 7ஆம் திகதியன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் ஹைட்ஸ் பகுதியில் இருக்கும் மவுண்ட் ஹெர்மனைக் குறிவைத்து ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு கூறியது.
மவுண்ட் ஹெர்மனில் இஸ்ரேலுக்குச் சொந்தமான முக்கிய கண்காணிப்பு நிலையம் உள்ளது.
காஸா போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.இதற்கு முன்பு கோலான் ஹைட்சைக் குறிவைத்து ஹிஸ்புல்லா பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஆனால் ஜூலை 7ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தாக்குதலில் அங்குள்ள ஆக உயரமான பகுதியில் இருக்கும் இஸ்ரேலிய ராணுவத்துக்குச் சொந்தமான இடம் ஒன்றைச் சேதப்படுத்தியிருப்பது இதுவே முதல்முறை என்று ஹிஸ்புல்லா தெரிவித்தது.
1973ஆம் ஆண்டில் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போருக்குப் பிறகு, மவுண்ட் ஹெர்மனில் உள்ள கண்காணிப்பு நிலையத்திலிருந்து சிரியா, ஈராக், ஜோர்தான், சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான சில பகுதிகள் ஆகியவற்றை இஸ்ரேல் கண்காணித்து வருகிறது.