துருக்கியில் மருத்துவமனை கட்டடத்துடன் மோதிய ஹெலிகாப்டர் – நால்வர் பலி!
தென்மேற்கு துருக்கியில் இன்று (22.12) காலை ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர்.
இரண்டு விமானிகள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு சுகாதாரப் பணியாளர் ஆகியோர் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்டை மாகாணமான அண்டலியாவில் நோயாளி ஒருவரை அழைத்துச் செல்வதற்காக முக்லா நகரத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தபோது மருத்துவமனை கட்டடம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
புறப்படும் நேரத்தில் கடும் மூடுபனி இருந்ததாகவும், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் முகலா ஆளுநர் இட்ரிஸ் அக்பியிக் குறிப்பிட்டார்.
(Visited 1 times, 1 visits today)