கலிபோர்னியாவில் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர்! ஐவர் படுகாயம்!

தெற்கு கலிபோர்னியாவில் ஹெலிகொப்டர் ஒன்று கட்டிடத்தின் மீது மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து நடந்த நேரத்தில் காயமடைந்த மூன்று பேர் சாலையில் நடந்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கலிபோர்னியா கடற்கரைக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அப்பகுதியில் பெருந்திரளான மக்கள் குவிந்திருந்தனர்.
குறித்த ஹெலிகொப்டரில் பயணித்த சிலர் அந்நிகழ்விற்கு வருகை தந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
(Visited 5 times, 1 visits today)