பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு : பல விமானங்கள் இரத்து!
பிரித்தானியாவில் கடுமையான வானிலை காரணமாக சில விமானங்கள் இரத்து, செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சில விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பனி நீக்கம் மற்றும் “பாதுகாப்பு காரணங்களுக்காக” குறைந்தது இரண்டு மணிநேரம் பர்மிங்காம் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்திய தகவல்களுக்கு தங்கள் விமான நிறுவனத்துடன் சரிபார்க்குமாறு பயணிகளிடம் அறிவுறுத்தியுள்ளது.
கேனரி தீவுகள், ஷார்ம் எல் ஷேக் மற்றும் புக்கரெஸ்ட் ஆகிய இடங்களில் இருந்து குறைந்தது ஏழு விமானங்கள் வர இருந்த நிலையில் இரத்து மற்றும் தாமதங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் அயர்லாந்து பகுதியில் மலைப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
(Visited 1 times, 1 visits today)