நைஜீரியாவை உலுக்கிய கனமழை – 30 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு

நைஜீரியாவில் பெய்துவரும் கனமழையால், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கு 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
போர்னோ மாநிலத்தின் பெரும்பாலான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அரசு தரப்பில் போதிய வசதிகள் செய்யப்படாததால், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக தனியார் படகு உரிமையாளர்கள் மீது புகார் எழுந்துள்ளது.
(Visited 18 times, 1 visits today)