கொங்கோவில் கனமழை – 176 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கு கொங்கோவில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் கன மழை பெய்து வருகிறது.
வெள்ளத்தில் சில கிராமங்கள் மூழ்கியதில் அப்பகுதி மக்கள் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள வீதிகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கொங்கோவில் வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதைந்தும் இது வரை 176 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மாயமான 100-க்கும் மேற்பட்டோரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
(Visited 25 times, 1 visits today)