வியட்நாமில் கனமழை – 41 பேர் பலி, 09 பேர் மாயம்!
வியட்நாமில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காணாமல்போயுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டள்ளது.
வெள்ளத்தில் 52,000க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன, மேலும் பல வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கனமழை தொடரும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய மாதங்களில் கடுமையான வானிலை மற்றும் சூறாவளியால் வியட்நாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)




