ஸ்பெயினில் கொட்டி தீர்த்த கடும் மழை : 50இற்கும் மேற்பட்டோர் பலி!
ஸ்பெயினில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வலென்சியாவின் கிழக்கு பிராந்தியத்தில் அவசர சேவைகள் இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தின.
நேற்று (30.10) பெய்த கடும் மழையால் தெற்கு மற்றும் கிழக்கு ஸ்பெயினில் வெள்ளம் எற்பட்டது.
இதனையடுத்து ஸ்பெயினின் அவசரகால பதிலளிப்பு பிரிவுகளில் இருந்து 1,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பேரழிவிற்குள்ளான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இதற்கிடையில் “நேற்று எனது வாழ்க்கையின் மிக மோசமான நாள்” என்று வலென்சியாவில் உள்ள Utiel நகரத்தின் மேயரான Ricardo Gabaldon தெரிவித்துள்ளார்.





