ஜப்பானில் கனமழை : மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

ஜப்பானின் தென்மேற்கு கியூஷு பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதுடன் ஆற்றின்மேல் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, குமாமோட்டோ நகரில் வசிக்கும் 3,60,000 மக்களை வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஜப்பானில் எதிர்வரும் வாரத்தில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும், மண்சரிவு மற்றும் வெள்ளம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 17 times, 1 visits today)