இந்தியாவில் கடுமையான பனிமூட்டம் : தாமதத்தை எதிர்கொள்ளும் விமான பயணிகள்!
கடுமையான பனிமூட்டம் இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் இன்று (03.01) காலை குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸுடன் தொடங்கியது . இது தொடர்ந்து ஐந்தாவது குளிர் நாளைக் குறிக்கிறது.
கடுமையான பணிமூட்டம் காரணமாக விமான சேவைகளில் தாமதம் மற்றும் ரத்து உள்ளிட்ட பிரச்சினைகளை பயணிகள் எதிர்நோக்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டாலும், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா போன்ற விமான நிறுவனங்கள் தாமதத்தை எதிர்கொண்டன.
மேலும் அமிர்தசரஸ் மற்றும் குவஹாத்திக்கு செல்லும் சில விமானங்கள் கணிசமாக பாதிக்கப்பட்டன. அதேபோல் ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
(Visited 2 times, 1 visits today)