இந்தியா

இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; 87 ஆக அதிகரித்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை

இந்தியாவில் வெப்ப அலை தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் வடமாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வெப்ப அலை தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் தென் மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க வகையில் வெப்பத்தின் தாக்கம் நிலவுகிறது. வெப்ப அலை மற்றும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் நேற்று வரை 54 பேர் உயிரிழந்தனர்.

At least 50 deaths blamed on India heat wave in just a week as record  temperatures scorch the country - CBS News

இந்நிலையில் இன்று வெப்ப வாத உயிரிழப்பு மேலும் அதிகரித்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

ஹரியாணா, சண்டிகர் – டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகள், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தானின் சில பகுதிகள், உத்தராகண்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வெப்ப அலை மற்றும் மிகக் கடுமையான வெப்ப அலை நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே