இலங்கை மக்களுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

இலங்கையில் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முறையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அத்தியாவசியமானது என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
(Visited 22 times, 1 visits today)