செய்தி விளையாட்டு

மீண்டும் இந்தியாவை நொறுக்கி தள்ளிய ஹெட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கார் கோப்பையின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்கியது.

நேற்று முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இரண்டாவது நாள் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமானது. ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் விக்கெட் இழந்து திணறியது.

பின்னர் களத்துக்கு வந்த ராவிஸ் ஹெட் சதம் கடந்து 152 ரன்களையும்,ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் அதிரடியாக அடித்து வெளியேறினார்கள்.

ஏனைய வீரர்கள் குருகிய ரன்களுக்குள் ஆட்டமிழக்க 405 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியா தரப்பில் பும்ரா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஏனைய இந்திய பௌலர்களின் மோசமான பந்துவீச்சு காரணமாக ஆஸ்திரேலியா சிறப்பான ஸ்கோரை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு மோசமான பவுலிங் லைனை இந்தியா கொண்டு சென்றது எப்படி? கஷ்டப்பட்டாலும் முஹம்மது சமியை கொண்டு வந்திருக்கலாம் அல்லது இசான் சர்மாவை முயற்சி செய்திருக்கலாம் இல்லையென்றால் புவனேஸ்வர் குமாரும் இருக்கிறார்.

இவர்களை யாரேனும் ஒருவரை அழைத்திருக்கலாம். ஏன் இந்திய கிரிக்கெட் வாரியம் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது என்பது தெரியவில்லை.

நாளை மூன்றாவது நாள் இன்னும் திருப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

(Visited 43 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி