தமிழ்நாடு

‘அவர் விளையாட்டாக சொல்லி இருப்பார்’; மன்சூர் அலிக்கானுக்கு சீமான் ஆதரவு

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் விளையாட்டாக சொல்லியிருப்பார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த சீமானிடன், மன்சூர் அலிகான் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “மன்சூர் அலிகானை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் என்னுடைய கட்சியில் நின்று போட்டியிட்டுள்ளார்.அவர் த்ரிஷா குறித்து வேண்டுமென்றே சொல்லியிருப்பாரா என்று தெரியவில்லை. அவர், நகைச்சுவையாக, விளையாட்டாக சொல்லியிருக்கலாம்.

அவர், ஒரு உணர்வுமிக்க தமிழர். எனக்கு தெரிந்து யார் மனதையும் கஷ்டப்படும் படி அவர் பேசமாட்டார். ஆனால் பலபேரின் மனம் காயப்பட்டிருந்தால் இந்த கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கலாம்” என்றார்.

மேலும் பேசிய சீமான், “இயற்கையாகவே மன்சூர் அலிகான் வேடிக்கையாக பேசும் மனிதர். அந்த மாதிரி தான் த்ரிஷா குறித்து பேசியிருப்பார். இந்த பிரச்சனையை இவ்வளவு பெரிதாக எடுத்து பேச வேண்டுமா என்று தான் எனக்கு தோன்றுகிறது.விஜய்க்கு ஒரு பிரச்சினை வரும்போது நடிகர் சங்கம் ஏதாவது பேசியுள்ளாதா, இவ்வளவு நாள் நடிகர் சங்கம் இயங்கியதா என்று கூட தெரியவில்லை”என்றார்.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்