தமிழ்நாடு பொழுதுபோக்கு

லியோ டிரெய்லருக்கும் ஆப்பு அடிச்சிட்டாங்களே… கொலை வெறியில் ரசிகர்கள்…

நடிகர் விஜய் ரசிகர்கள் விஜய் படங்களின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகும் போது ஆயிரக் கணக்கில் ரோகிணி தியேட்டர் முன்பாக கூடி வெளியே பெரிய திரையில் வெளியிடப்படும் டீசர் மற்றும் டிரெய்லரை கண்டு ரசித்து உற்சாகம் அடைவார்கள்.

சோஷியல் மீடியாவிலும் விஜய் ரசிகர்கள் அந்த நிகழ்வை கெத்தாக பேசி அஜித், சூர்யா, ரஜினி ரசிகர்களை ட்ரோல் செய்து வந்தனர்.

இந்நிலையில், அதற்கும் தற்போது ஆப்படித்து விட்டதாக ரோகிணி தியேட்டர் ஓனரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு விஜய் ரசிகர்களை மேலும், சோகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்திலாவது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கப் போகிறது. நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்கலாம் என ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி ரசிகர்களுக்கு அதிக கூட்டம் வரக் கூடும் என்கிற எச்சரிக்கை காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.

லியோ டிரெய்லர் நாளை அக்டோபர் 5ம் தேதி வெறும் சன் டிவி யூடியூப் சேனலில் மட்டுமே வெளியாகும் என்றும் எந்தவொரு டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியோ ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியோ லியோ படக்குழு நடத்தி படத்தை புரமோஷன் செய்யப் போவது கிடையாது என்பது உறுதியாகி உள்ளது.

அதிகாலை 4 மணி காட்சி முதல் லியோ படத்துக்கு ஏகப்பட்ட விஷயங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், விஜய் படங்களின் முன்னோட்டங்கள் வரும் போது கோயம்பேடு அருகே உள்ள ரோகிணி தியேட்டருக்கு வெளியே 10 ஆயிரம் ரசிகர்கள் வரை கூடி அந்த டிரெய்லரை கண்டு களித்து கொண்டாட்டம் போடுவார்கள்.

ஆனால், தற்போது, போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை என ரோகிணி தியேட்டர் ஓனர் ரேவந்த் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், மேலும், தொடர்ந்து டிரெய்லர் கொண்டாட்டத்திற்கு அனுமதி பெற முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளார். 10 ஆயிரம் பேர் கூடினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் நிச்சயம் அனுமதி கிடைக்காது என்றே தெரிகிறது என்கின்றனர்.

விஜய் படத்தின் ஒவ்வொரு கொண்டாட்டங்களும் தொடர்ந்து ரத்தாகி வரும் நிலையில், லியோ படத்தின் ரிலீஸ் சமயத்தில் மேலும், எத்தனை சிக்கல்கள் வரும் என ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்