“சாதாரண மக்களும் பறக்கலாம்” ஆசை வீண் போனதா? உதான் திட்டத்தின் தோல்விக்கு என்ன காரணம்?
இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களையும் பெரிய நகரங்களோடு இணைத்து, பொதுமக்களுக்கு விமான சேவையை எளிமையாக்கும் முயற்சி திட்டத்தின் முழுமையான பயன் இன்னும் பெறப்படவில்லை.
2017 ஆம் ஆண்டு மத்திய அரசு உதான் (UDAN) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. “சாதாரண மக்களும் பறக்கலாம்” என்ற நோக்குடன் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை பெரிய நகரங்களுடன் இணைத்து, பொது மக்களுக்கான விமான பயணத்தை எளிமையாக்க உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், சில இடங்களில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டன. ஏற்கனவே உள்ள விமான ஓடுபாதைகள் கூட புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
2014 ஆம் ஆண்டு நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 இருந்தது. உதான் திட்டத்தினால், தற்போது அது 160 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு இதே காரணத்தாலே நாடாளுமன்றத்தில் விமான நிலைய எண்ணிக்கை அதிகரித்ததாக தெரிவித்துள்ளது.
15 விமான நிலையங்கள் செயல்படவில்லை
அதற்கேற்ப அனைத்து உதான் திட்ட விமான நிலையங்களும் செயல்படுகிறதா என்று பார்க்கும்போது, உண்மை வேறுபடுகிறது. 15 விமான நிலையங்கள் தற்போது “temporarily non-operational” என வகைப்படுத்தப்பட்டு செயல்படவில்லை. அதாவது இந்த விமான நிலையங்களில் விமான போக்குவரத்து நடக்கவில்லை.
இந்த 15 விமான நிலையங்களை பராமரிக்கவே, அரசு 900 கோடி ரூபாய் செலவிடுகிறது. ஆரம்பத்தில், மானியத்துடன் டிக்கெட் விலை குறைவு இருந்ததால் மக்கள் விமான சேவையை அதிக அளவில் பயன்படுத்தினர். ஆனால் மானியம் காலாவதியடைந்ததும், டிக்கெட் விலை உயர்ந்தது இதனால் பயணிகள் மாற்று போக்குவரத்தை தேடி சென்றனர்.
பட்ஜெட் ஏர்லைன்களின் குறைவு
சிறு நகரங்களுக்கு இடையிலான விமான சேவைக்கு பட்ஜெட் விமான நிறுவனங்கள் முக்கியம். ஆனால் இந்தியாவில் இதன் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்,
புதிய விமான நிறுவனங்கள் வந்தாலும் சீரான வளர்ச்சி இல்லாமல் தொழில் நிறுப்படுகிறது.
பருவம் மற்றும் பயணிகள் எண்ணிக்கை சவால்கள்
வட இந்திய மாநிலங்கள், மலைப்பாங்கான பகுதிகளில் விமான சேவை இயக்குவது கடினம். ஒக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம்
வரை பனி மற்றும் குளிர் பிரச்சினைகள் விமான சேவையை பாதிக்கின்றன.
மேலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தால், விமான நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச இலாபம் கூட கிடையாது.
தற்போதைய நிலை
2024 ஆம் ஆண்டில், உதான் திட்டத்தில் திறந்த 7 விமான நிலையங்கள் செயல்படவில்லை, அதில் 5 விமான நிலையங்கள் உத்திரபிரதேசத்தில் உள்ளன.
சிறு நகரங்களில் கட்டப்பட்ட 93 விமான நிலையங்களில் 78 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
உதாரணமாக, 2017ஆம் ஆண்டு சிம்லாவில் திறந்த விமான நிலையம் தற்போது செயல்படவில்லை, ஆனால் இதை பராமரிக்கவே அரசு 116 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
ஒரு விமான நிலையம் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பது அதன் வெற்றிக்கு முக்கியம் என மார்ட்டின் கன்சல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மலைப்பாங்கான அல்லது மூன்றாம் நிலை நகரங்களில் இலாபம் இல்லாததால் விமான சேவை இயக்குவது கடினம்.
Chennai, Delhi போன்ற பெரிய நகரங்களுக்கு அருகே உள்ள இடங்களில் மட்டுமே பயணிகள் வரவேற்பு அதிகம்.
எதிர்கால திட்டங்கள்
மத்திய அரசு உதான் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. அதன்படி, செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், செயல்படாத விமான நிலையங்களை இயக்கத் தொடங்கல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
உதான் திட்டம் இந்தியாவின் சிறிய நகரங்களுக்கு விமான சேவையில் புதிய வாய்ப்புகளை திறந்துள்ளதாலும், சில இடங்களில் சேவை சிரமங்களை எதிர்கொள்கிறது.
மார்ட்டின் கன்சல்டிங் போன்ற நிறுவனங்களின் ஆய்வுகளின் படி, விமான நிலையம் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பது அதன் வெற்றிக்கான முக்கிய காரணி ஆகும். அதனால், திட்டத்திற்கான இடம்தெரிவு மிக முக்கியம் என்பதை உணர்த்துகிறது.





