பத்திரிகைகளுக்கு எதிரான ஹாரியின் சட்டப் போராட்டம் – லண்டன் நீதிமன்றில் வழக்கு
சசெக்ஸ் டியூக் இளவரசர் ஹாரி மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
சில செய்தித்தாள்கள் தகவல்களைச் சேகரிக்க சட்டவிரோத முறைகளை பயன்படுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
டெய்லி மெயில் பத்திரிகையின் வெளியீட்டாளர் நிறுவனமான அசோசியேட்டட் செய்தி தாள் நிறுவனத்திற்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஆனால் இந்த முறை, இளவரசர் ஹாரியின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. முன்பு போல அனைத்தையும் எதிர்த்து போராடாமல், தனது குடும்பத்தினருடன் நல்லுறவை மீண்டும் ஏற்படுத்துவது பற்றியும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
இவ்வழக்கில், இளவரசர் ஹாரியுடன் சேர்ந்து, கொலை செய்யப்பட்ட ஸ்டீபன் லாரன்ஸின் தாயார் பரோனஸ் லாரன்ஸ், பிரபல பாடகர் சர் எல்டன் ஜான், நடிகை லிஸ் ஹர்லி ஆகியோரும் சாட்சிகளாக ஆஜராக உள்ளனர்.
செய்தித்தாள் நிறுவனங்கள் சட்டவிரோதமாக நடந்து கொண்டதாகக் கூறி, இளவரசர் ஹாரி தொடரும் இது மூன்றாவது முக்கிய நீதிமன்ற வழக்கு ஆகும்.





