உலகில் பசுமையான இடங்களில் வாழ்பவர்களுக்கு ஆய்வில் வெளியான மகிழ்ச்சியான தகவல்
பசுமையான இடங்களில் வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பசுமையான இடங்களில் வாழ்பவர்கள் இளமையாகவே தோன்றமுடியும் என இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நகரப் பூங்காக்களும் பசுமைவெளிகளும் நமக்கு மிகவும் முக்கியம். வெப்பத்தைக் குறைக்கின்றன. பல்லுயிர்ச் சூழலை ஊக்குவிக்கின்றன. மேலும் நகரச் சூழலை அமைதியாக்குகின்றன. முக்கியமாக இளமையாகவே தோன்றமுடியும் என குறிப்பிடப்படுகின்றது.
“Science Advances” என்ற சஞ்சிகையில் அதன் ஆய்வு வெளியானது. பசுமை இடங்களைச் சுற்றி வசிப்பவர்கள் சராசரி மனிதர்களுடன் ஒப்பிடுகையில் இரண்டரை வயது குறைந்து காணப்படுவார்கள் என்று ஆய்வு தெரிவித்தது.
பெர்மிங்கஹம், சிகாகோ போன்ற நகரங்களிலுள்ள மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டது. பசுமை இடத்தைப் பொறுத்து மூப்படைவது தாமதமாலாம் என இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.