திருமணத்திற்குப் பின்பும் அழகு குறையாத மில்க் பியூட்டி… கையில் கிளாசுடன்… அட்டகாசமான படங்கள்
ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் அறிமுகமாகியுள்ளார்.
ஹன்சிகா மோட்வானி இந்தியாவில் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர்.
ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவார். மும்பையில் போடார் சர்வதேசப் பள்ளியில் கல்வி பயின்றார்.
ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார் (இது சஞ்சு என்ற பையனைப் பற்றியும் அவனது மந்திரப் பென்சிலைப் பற்றியதுமான கதையாகும்).
அதே நேரத்தில் தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத் என்ற இந்தித் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார்.
இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார்.
கோய் மில் கயா திரைப்படத்தில் வரும் குழந்தைகளில் ஒருவராகவும் நடித்திருந்தார்.
ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார்.
நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீய வேலை செய்யணும் குமாரு, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, வேட்டை மன்னன், ரோமியோ ஜுலியெட் போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் திரையுலகிற்கு வந்து சில ஆண்டுகளே ஆனாலும் அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 50-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இதுவரை நடித்துள்ளார்.
29 வயதாகும் இவர், ததனது நண்பியின் கணவரை அண்மையில் திருமணம் முடித்திருந்தார்.
தற்போது படங்கள் எதிலும் நடிக்காத இவர், கணவருடன் சுற்றுலா சென்று புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.