இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் மரணம்

இஸ்ரேல் மீது கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது.
21 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், ஹமாஸ் ஆயுத பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபெய்டா இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டு உள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கத்ஜ் குறிப்பிட்டுள்ளார்.
காசா நகரில் இஸ்ரேல் புதிய ராணுவ நடவடிக்கையை தொடங்கிய நிலையில், கடந்த வெள்ளி கிழமை ஒபெய்டா கடைசியாக அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.