காசா பகுதியில் இருந்து ஹமாஸ் வெளியேற வேண்டும் – இஸ்ரேல் வலியுறுத்தல்!
பாலஸ்தீன போராளிக் குழுவிற்கு பொது மன்னிப்பு வழங்கும் ட்ரம்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரித்துள்ள நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஹமாஸ் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என இன்று தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் நெதன்யாகு வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலிய அரசாங்கம் இந்த திட்டம் அமைதி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் நமது அண்டை நாடுகள் அனைத்திற்கும் அமைதி மற்றும் செழிப்புக்காக தனது கையை நீட்டுகிறது எனவும் ஹமாஸ் மற்றும் அதன் ஆதரவாளர்களை பிராந்தியத்திலிருந்து வெளியேற்றுவதில் எங்களுடன் இணையுமாறு” அண்டை நாடுகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள செய்தி தொடர்பாளர் ஒருவர், காசாவில் ஹமாஸ் இல்லை என்பதையும், காசா பகுதிக்குள் பாலஸ்தீன மக்களை நிர்வகிக்க ஹமாஸுக்கு எந்த திறனும் இல்லை என்பதையும் உறுதி செய்வதே இதன் பொருள்” எனக் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




