04 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ் போராளிகள்!

ஹமாஸ் நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளன.
கான் யூனிஸுல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஷிரி பிபாஸ் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் – நான்கு வயது ஏரியல் மற்றும் ஒன்பது மாதக் குழந்தை கிஃபிர் ஆகியோரின் உடல்களை விடுவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஹமாஸ் உறுப்பினர்கள் முதல் சவப்பெட்டியை எடுத்துக்கொண்டு செஞ்சிலுவைச் சங்க வேன்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆயுதமேந்திய ஹமாஸ் போராளிகள் மக்களை தடுத்து நிறுத்தியுள்ளதுடன், உடல்கள் மக்களிடம் காண்பிக்கப்படாமல் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)