மத்திய கிழக்கு

தொடரும் மோதல் நிலையில் இஸ்ரேலுக்கு ஹமாஸ் விடுத்துள்ள புது எச்சரிக்கை..

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தொடரும் மோதலில் ஹமாஸ் புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஆயுதக் குழுவின் அக்.7 தாக்குதலில் சுமார் 1,400 பேர் இஸ்ரேலில் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினரை வேரறுக்கும் தீர்மானத்தோடு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் காசா மீது போர் தொடுத்தது. முதலில் வான்வழித் தாக்குதல் பின்னர் தரைவழித் தாக்குதல் என காசாவில் இஸ்ரேல் ராணுவம் ஊடறுத்து வருகிறது. இந்த தாக்குதலில் காசாவின் சுமார் 17 ஆயிரம் பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் சிறார் ஆவர்.

காசாவில் தாக்குதலை தொடர்ந்து வரும் இஸ்ரேல் ராணுவத்தினரின் பிரதான நோக்கம், ஹமாஸ் வசமிருக்கும் பிணைக்கைதிகளை மீட்பது ஆகும். அக்.7 தாக்குதலின்போது, இஸ்ரேலில் இருந்து சுமார் 240 பேர்களை ஹமாஸ் காசாவுக்கு கடத்திச் சென்றது. இஸ்ரேலியர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களையும் உள்ளடக்கிய இந்த பிணைக்கைதிகளில் கணிசமானோர், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான கைதிகள் பரிமாற்ற நடவடிக்கை 1:3 என்ற விகிதத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் ஹமாஸ் 80 பிணைக்கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் 240 சிறைக்கைதிகளை இதுவரை விடுவித்துள்ளது. அதானையடுத்து போர் தாக்குதல் மீண்டும் தொடங்கியதில், இம்முறை தெற்கு காசாவை இஸ்ரேல் குறிவைத்து தாக்கி வருகிறது.வடக்கு காசா மீதான தாக்குதல் காரணமாக, தெற்கு காசாவுக்கு இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். ஹமாஸ் அமைப்பினர் என்ற குற்றச்சாட்டில், அப்பாவி பாலஸ்தீனியர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்படுவதாக ஹமாஸ் குற்றம்சாட்டி உள்ளது.

Israel-Hamas War highlights: Two rockets launched from Syria toward Israeli  territory, says army | Hindustan Times

இதனிடையே கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் வசமிருக்கும் பிணைக்கைதிகள் எவரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவின் செய்தி தொடர்பாளரான அபு ஒபையா என்பவர், “இஸ்ரேலிய படையுடனான எங்களது யுத்தம் தொடரும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தெருக்கள் தோறும் சண்டை போடுவதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்தவொரு பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள். எங்களது புனிதப் போர் தொடரும்” என்று அறிவித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கடைசிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஹமாஸ் வசமிருக்கும் பிணைக்கைதிகள் உயிருக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் இருதரப்பு இடையிலான சிக்கலை அதிகரித்துள்ளது.

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!